Ad Widget

மதம் மக்களைப் பிரிக்கக்கூடாது – முதலமைச்சர்

மதமானது மக்களைப் பிரித்தல் ஆகாது. எல்லோரையும் மதித்து மாண்புற்று வாழ வழிவகுக்க வேண்டும். சமய ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

wigneswaran__vick

மானிப்பாய் மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் கல்லூரி மண்டபத்தில் புதன்கிழமை (08) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,

முன்னொரு காலகட்டத்தில் மகளிருக்கு ஏன் கல்வி என்ற ஒரு கேள்வி பூதாகாரமாக மக்களிடையே பரந்திருந்தது.

வீட்டைப் பார்க்க வேண்டும், கணவனையும் பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும், பெண்கள் கல்வி கற்க போய்விட்டால் வீட்டின் அமைதி வாழ்க்கை பாதிக்கப்படும் என்றெல்லாம் பலர் பயம் காட்டினார்கள். எமது சமுதாயம் சிறிது சிறிதாக முன்னேறியே இன்றைய காலகட்டத்துக்கு வந்துள்ளது.

பெண்களின் இடம் அவர்களின் குடும்பம் வாழும் வீடுகள் தான், திணைக்களங்களும் பணிக்கூடங்களும் அல்ல என்று கூறும் வயோதிபர்கள் இன்றும் உள்ளனர்.

எனினும், எமது சமுதாயம் முன்னேற்றப் பாதையிலேயே செல்கின்றது. நான் முன்னேற்றம் என்று கூறுவது வேறொரு அர்த்தத்தில். எமது வாழ்க்கை முறை படிப்படியாக வளர்ந்து வருகின்றது.

எம்மில் சிலர் எவ்வளவுதான் பழமைவாதிகளாக இருந்தாலும் உலகமோ ஏதோ ஒரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

அதற்கு நாங்கள் ஈடுகொடுக்கும் விதத்தில் எம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் நாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்றார்.

Related Posts