Ad Widget

பிரதமர் வருகையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?, ஆயரிடம் கேள்வி எமுப்பினார் ஜேர்மன் தூதுவர்

யாழ்.வருகை தந்த ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோர்கான் மூர் காட்டுக்கும் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

german

இன்று காலை 10மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

மேலும் குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜேர்மன் தூதுவர் யாழ்ப்பாணம் வந்ததன் நோக்கம் இங்குள்ள நிலமைகளை அறியவே என்றும் முக்கியமாக
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.வருகை தந்தமை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்வியை தன்னிடம் எழுப்பினார்.

அதற்கு நான் ஆம், அவர் வருகை தந்து மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கி வைத்தது மட்டுமல்லாது. வேறு பல பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுத் தருவதாக தனக்கு வாக்குறுதி அளித்ததாக அவரிடம் தெரிவித்தேன்.

மேலும் ஜேர்மன் தூதுவர் பிரதமர் ரணில் யாழ்.வருகை நல்ல தருணம் அதாவது மாகாண சபைக்கும், புதிய அரசுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.ஆயினும் பிரதமர் ரணில் மற்றும் முதலமைச்சர் இடையில் இணக்கம் இல்லை அதற்கு காரணம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அதற்கு ஆயர் பதிலளிக்கையில்,

பிரதமர் ரணில் மற்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் மக்கள் மட்டில் எதுவித பிரச்சினைகளும் இல்லை அது அவர்களின் கொள்கை மற்றும் ஆளுமை தொடர்பிலான பிரச்சினை தான் என அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

மேலும் இறுதியாக ஜேர்மன் தூதுவர் தற்போது இளைஞர்களின் ஆதங்கம் என்னவாக உள்ளது இன்னமும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்கிறார்களா ?என ஆயரிடம் கேள்வியொன்றை எழுப்பினார்.

அதற்கு ஆயர்,

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பக்கள் குறைவாக இருப்பதால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்ய நேரிடுகின்றது.இந்த நிலைமை மாறி உள்ளுரிலேயே இளைஞர்கள் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஆயர் தெரிவித்தார்.

அதற்கு ஜேர்மன் தூதுவர் நமது ஜேர்மன் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் முனைப்பில் செய்ற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Posts