Ad Widget

ஹோமாகம – தலைமன்னார் நகரங்களுக்கு புதிய ரயில் சேவை

ஹோமாகம மற்றும் தலைமன்னார் ஆகிய நகரங்களுக்கான புதிய ரயில் சேவைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன.

ஹோமாகம- கொழும்பு கோட்டை மற்றும் கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரையில் இச்சேவைகள் நடைபெறவுள்ளன.

இதற்கமைய காலை 7.00 மணிக்கு ஹோமாகம தொடக்கம் கோட்டை ரயில் நிலையம் வரையிலும் மாலை 7.00 கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து தலைமன்னார் வரையிலும் இச்சேவை நடைபெறும்.

வடக்கு மற்றும் கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவணை இன்று தொடக்கம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts