- Friday
- November 14th, 2025
வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி நியதிச்சட்டம் சற்றுமுன்னர் சகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் முன்பள்ளி நியதிச்சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சபை குழுநிலைக்கு மாறி விவாதம் இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்டத்தில் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பாடசாலை மட்டத்தால் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று இன்று ஆரம்பமாகி செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக இன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கிற்கு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக...
யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பாக மேலும்...
வடக்கு மாகாணத்தில் பனை மரங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் பனங் கன்றுகளை அதிகளவில் நடுகை செய்வதற்கும் பனை அபிவிருத்தி சபை உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த...
வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவதையே தாம் விரும்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இன்னும் 150,000 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அதாவது ஐந்து அல்லது ஆறு பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் காணப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர்...
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என்று வெளியுறவுத் துறை பதில் அமைச்சர் அஜித் பி பெரேரா உறுதிப்படுத்தினார். புதிய தேர்தல் நடைமுறையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும்....
வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி...
இல்லாதவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்க வேண்டாம். - இவ்வாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கில் போதைப் பொருள் பாவனை, அதனூடான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று...
நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன...
வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு...
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து...
இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து...
இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவிருந்த சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் மற்றும் மேலும் 4 பேர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்களை மீட்பதற்கான ஆட்கொணர்வு...
வடபகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையினை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்பட்டன. குறித்த விடயங்களை நேரடியாக ஆராயும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு...
எழுதுமட்டுவாள் பகுதியிலும் தலையும் முகமாலைப் பகுதியில் முண்டமுமாக சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு எழுதுமட்டுவாள் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் தலையும் முகமாலைப் பகுதியில் அதன் முண்டமும் காணப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சடலத்தை மீட்ட பளை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். தலை காணப்பட்ட...
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது. நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்றுவரைக்கும் இடம்பெறும். மேற்படி கூட்டத்தில் சர்வதேச தரப்புச் சார்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹீம்...
சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு அண்மையாக சடலம் ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இளம் குடும்பஷ்தரான தவக்குமார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இவர் வேலியோரமாக வீழ்ந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். இவரது மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை. இவரின் முகத்தில் உரசல் காயங்கள்...
குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த...
உயர் பாதுகாப்பு வலயமாக சுவீகரிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளில் மக்களை மீளக்குடியர்த்தி, அவர்களின் மத வழிபாடுகளை தொடர்ந்து நடத்துவதற்கு இப்புதிய அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் ஆலய விசாக மடை திருவிழாவுக்கு, 25 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது...
Loading posts...
All posts loaded
No more posts



