- Sunday
- July 26th, 2026
பாராளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் "கருணா" என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை. கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க் கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து...
கறைபடியாத கைகளுடன் நாங்கள் இளம் கல்விமான்களுடன் களத்தில் இறங்கியுள்ளோம்.என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். அனைவரும் மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது.ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களை போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச்...
இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...
வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபர்களை...
1980 களில் நிலவிய பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய்...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா,...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறது,நேற்றிரவு முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்புமனுவில் கைச்சாத்திடார் யாழ்ப்பாணப்பட்டியல் வருமாறு (1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...
இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பு மனுவில் நேற்றிரவு கஜேந்திரகுமார் கையெழுத்திட்டார்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுவிஸ் ஆசாமி பொலிஸ்பிடியிலிருந்து தப்பித்து எப்படி வெள்ளவத்தை சென்றார் என்பது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவன், சம்பவதினம் தான் கொழும்பில் இருந்ததாக கூறிய விடயம் தொடர்பான விசாரணை...
கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வி.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி களமிறங்கவுள்ளது. இன்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்றது. அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி...
எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து...
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில்...
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கை முழுமையாக அப்படியே வருமாறு: வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படாத நிலை தொடர்ந்து இருக்கும் இந்தச்...
திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதை வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் செய்து காட்டியுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மதிசூதனன் இரமீலா ஆகியோரின் திருமணத்தின்போதே இந் நிகழ்வு இடம்பெற்றது. திருமணங்களை பெரும் பண...
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கில் பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா இனி முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர் வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர்கள் வித்தியாவின் தாய்க்கும் சகோதரனுக்கும் கொடுத்து வந்த...
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு மாதத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று(12) இடம்பெற்றது. 'சுய கண்ணால் போதையற்ற உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. போதைப்பொருளிற்கு எதிராண சத்தியபிரமாணம் அரச அதிகாரிகளினால் எடுக்கப்பட்டதுடன் விசேடமாகாண இம்மாதத்தில்...
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
