Ad Widget

போதைப் பாவனையை ஒழிக்காவிட்டால் அது எமது சந்ததிக்கு செய்யும் துரோகம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எமது சமூகத்தில் பரவியுள்ள போதைப் பொருள் பாவனையை நாங்கள் இல்லாது செய்யாவிட்டால், அது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த துரோகமாக அமைந்து விடும். இவ்வாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது போதைப் பொருள் பாவனை ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக கஞ்சா போன்ற சட்ட விரோதமான போதைப் பொருள்களை நாட்டுக்குள் களவாக கொண்டு வருகிறார்கள். பின்னர் அதனை மக்கள் மத்தியில் விற்று மக்களை அதற்கு அடிமையாக செய்து மக்களை அழிக்க முற்படுகின்றனர்.

மேலும் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவோரை இனங்கண்டால் அவர்கள் தொடர்பான தகவல்களை ஊடனடியாக எமக்கு தெரிவியுங்கள். நாங்கள் அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனையை பெற்றுக் கொடுக்கிறோம்.

எனவே இப் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு எதிர்காலத்தில் சிறந்த ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Related Posts