- Friday
- November 14th, 2025
கந்தரோடை அருளானந்த பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற குழு மோதலில் 8பேர் காயங்களுக்கு ஊள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். இசை நிகழ்ச்சிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலர்...
அனலைதீவு, 6ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த செவ்வராசா ரமேஸ் (வயது 36) என்பவரை புதன்கிழமை (03) தொடக்கம் காணவில்லையென அவரது உறவினர்கள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத் தலைவரைச் சந்தித்துவிட்டு வருவதாக கடந்த புதன்கிழமை (03) வீட்டிலிருந்து புறப்பட்டவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு...
வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் பெருமளவு மலர்கள் கொண்ட நந்நதவனம் ஒன்று அமைப்பதற்கான முன் முயற்சி நடவடிக்கைகளை சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். இதற்கான காணியை ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் மூவர் தமது தாய் தந்தையர்களின் நினைவாக...
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வழிப்பாட்டுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். நீண்ட காலத்துக்கு பின்னர் இராணுவ அனுமதி கிடைத்தமையால் பெருமளவான மக்கள் ஆலயத்துக்கு செல்வதற்காக வயாவிளான் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடினர். இதன்போது உயர் பாதுகாப்பு வலய எல்லையில் பதிவுகளை மேற்கொண்டே மக்கள் உட்செல்ல...
இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு...
வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவில்...
எமது அரசு காடுகளும் வன சீவராசிகளும் பாதுகாப்பாக இருப்பதற்காக அவை அழிக்கப்படுவதை தடுக்கின்ற அதேவேளையில், கூருணர்வு மிக்க சூழல் முறைமையை பாதுகாப்பதற்காகவும் புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கும். அவற்றை அழிக்கின்ற சக்திகளை அந்தஸ்த்து பாராமல் சட்டத்தின் முன் கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ள...
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதன் போது உடன்...
அரியாலை பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முள்ளி வீதி - அரியாலை பகுதியில் உள்ள வீட்டு வாயிலின் முன்பாக குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம், இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டினை...
இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (04) மாலை தொலைபேசியில் அழைத்து பான் கீ மூன் வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச்...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்திற்கு வெள்ளிகிழமை வழிபாட்டிற்கு செல்ல, பலாலி பாதுகாப்பு தலைமையகம் அனுமதித்துள்ளது. ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வெள்ளிக்கிழமை ஆகும். அதற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு அப் பகுதி மக்களினால் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர்,...
தனக்கு பிறந்த குழந்தையை ஏற்க மறுத்த 30 வயதுடைய பெண்ணொருவரை, மானிப்பாயிலுள்ள காப்பகம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். திருமணமாகாத நிலையில் தான் அந்த குழந்தையை...
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின்...
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் கைதான 20 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா, இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார். தன்னைக் காதலித்த பெண், தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் யுவதியின் கழுத்தை வெட்டியதுடன்,...
கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள்...
வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு யாழ். ஊடக அமையம், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு, மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல்...
யாழ். நகரப் பகுதியில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற குழப்பச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 5 மாணவர்கள் மற்றும் ஒரு கல்வித்திணைக்கள பணியாளர் உட்பட அறுவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மிகுதி 34 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (04)...
தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார்....
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருந்தெருக்கள் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தக் காலத்தில் வீதி அபிவிருத்திக்கென்று வங்கி ஒன்றில் இருந்து பெற்ற 55 பில்லியன் ரூபாயில் 28பில்லியன் ரூபாயை வேறு ஒரு அமைச்சுக்கு மாற்றியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம்...
Loading posts...
All posts loaded
No more posts
