- Friday
- November 14th, 2025
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ , மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் உட்பட 65 பேர் அந்நாட்டரசால் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களையே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இவர்களில் 54 இலங்கையர்கள், 10 பங்களாதேஷிகள், மியான்மாரை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்குகின்றனரா? கடந்த காலங்களில் இனந்தெரியாத நபர்களின் பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகளினால் எமது சமூகம் பட்டிருந்த வேதனைகள் ஏராளம். அந்த நிலை தற்போது மாறியுள்ள சூழலில் மீண்டும் இனந்தெரியாத ஆயுததாரிகள் தலைதூக்கியுள்ளமை எமது சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் செயலாகவே உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
முல்லைத்தீவு பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மோதியதில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில், சுமார் 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பஸ் குடைசாய்ந்தமையால்...
வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 - 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 13 ஆம் திகதி காணாமல் போயிருந்த புங்குடுதீவு மாணவி வித்தியா 14ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில்...
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கீழுள்ள வர்த்தக நிலையங்கள், பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டத்துக்கு முறையான நடைமுறைகளை, யாழ். வணிகர் கழகம், திங்கட்கிழமை (01) முதல் இறுக்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ். வணிகர் கழகத்தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த மே 26ஆம் திகதி நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, மாவட்டச் செயலாளர் நாகலிங்கம்...
எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 130 பேரில் 47 பேர் இன்று யாழ். நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் 16 வயதுக்குக் உட்பட்ட இருவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஏனையோருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார். சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். வித்தியா குடும்பத்தினர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா உள்ளிட்ட 6 சட்டத்தரணிகள்...
வடக்கு மாகாணத்தில் கடந்த 14 நாள்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீது 10 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் . இதில் சில வன்புணர்வு சம்பவங்கள் வெளியாட்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்ற போதிலும் இதில் சில பாடசாலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர்...
பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஞாயிற்றுக்கிழமை (31) கூறினார். புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை...
தேனிலவுக்காக சென்ற ஜோடியில், மணமகன் அதுவும் நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தெல்தோட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியில் தேனிலவை கழிப்பதற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணமகனான தெல்தோட்ட ரெலிமங்கொடயில் வசிக்கும் 33 வயதான ஜி.தர்மசேன என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்....
சாவகச்சேரி பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி புகையிரத நிலைய வீதியில் தனித்து வசித்து வரும் நாகேஸ்வரி மகாதேவா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- வீட்டின் வாசல் கதவு திறக்கப்பட்டிருந்தும் வீட்டு படலை பூட்டப்பட்டிருந்த நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அயலவர்கள் தொலைபேசி மூலம்...
கிளிநொச்சி நகரில் கடந்த வியாழக்கிழமை காணாமற்போன மாணவி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்த்தனர். கிளிநொச்சி நகரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் தனது தாயாரை சந்திக்கச்சென்ற மாணவியை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று பெற்றோர் கிளிநொச்சி...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இதையடுத்து ஊர்காவற்றுறை விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் போடப்பட்டுள்ளன. அத்துடன் விசேடமாக அனுராதபுரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அண்மையாக நிறுத்தப்பட்டுள்ளது. தவிர ஊர்காவற்றுறையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கு தடை...
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு , ஆகிய ஏழு சாலைகளிலும் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியம் அறிவித்துள்ளது. பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை காரைநகர் ஆகிய பகுதிகளிலிருந்து...
இன்று உலக பெற்றோர்கள் தினமாகும். 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பிரகடனம் A/RES/66/292 அமைய உலக பெற்றோர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினம் உலக பெற்றோர்களின் மகத்தான சேவையை பிள்ளைகள் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைவதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. பெற்றோர்- பிள்ளைகள்- நாட்டின் பிரதிநிதிகள்-...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக காரைநகருக்கும், ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடல்மார்க்க ´பாதை´ ஊடான சேவை அடுத்த மாதம் தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த இரு மாதங்களாக கேபிள் இல்லாத நிலையிலும், பாதை பழுதடைந்திருந்த நிலையிலும் இரு இடங்களுக்குமான கடல்மார்க்க சேவைகள் தொடர முடியாத நிலை இருந்து...
மக்களால் மாத்திரமே பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 08ம் திகதி கிடைத்த மக்கள் உத்தரவு தான் பிரதமராவதற்கு கிடைத்த மக்கள் உத்தரவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யார்...
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் காணிச் சொந்தக்காரர்கள் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று சனிக்கிழமை காணிகளை துப்பரவு செய்த, தற்காலிக கொட்டகைகள் அமைத்து தங்கியிருந்த பலரை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். குறித்த காணிகள் தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என...
Loading posts...
All posts loaded
No more posts
