- Saturday
- July 12th, 2025

இன்று சர்வதேச தாதியர் தினமாகும். "மாற்றத்துக்கான சக்தியாக - பயனுள்ள பராமரிப்பு" என்ற தொனிப் பொருளில் இவ்வாண்டு தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. தாதியர் அனைவரையும் சமமாக மதித்து செய்து வரும் அரும் பெரும் சேவைகளையும் தியாகங்களையும் நினைவு கூரும் வகையில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 1965ஆம் ஆண்டு முதல் சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை...

வல்லை-அராலி பிரதான வீதியில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் அடங்கும் வீதிக்குப் பதிலாக மாற்றுவீதி அமைப்பதற்கு இராணுவத்தினர் மேலும் 27 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வல்லை-அராலி பிரதான வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலய எல்லைக்குள் அகப்பட்டுள்ளது.இதனால்...

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரியமுறையில் இடம்பெறாமையால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்கின்றனர். குடிநீர் விநியோகம் தடைப்படும் போது 6 கிலோமீற்றர் பயணம் செய்து யாழ். நகர்ப் பகுதிக்கு சென்று மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் கொத்தத்துறையில் ஆள்நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதுடன், சடலத்தின் அருகில் அவரது ஆடைகள், பொருட்கள் அடங்கிய பயணப் பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது....

மகேஸ்வரி நிதியத்திலிருந்து தங்களுக்கு தரவேண்டிய வைப்புப் பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மனு சமர்ப்பிப்பது என யாழ்.மாவட்ட பாரவூர்திகள் சங்கப் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சங்கத்தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கோண்டாவில் கிழக்கில் அமைந்துள்ள சங்க கட்டடத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்...

முன்னைய அரசாங்கத்தால் அரச வெளிக்கள அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பெற்ற அலுவலர்கள் தங்களது பணிகளில் இருந்து சென்றால், மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதியைச் செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்டச் செயலகங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது. வெளிக்கள அலுவலர்களிடம் 50 ஆயிரம் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு...

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை நாளைமறுதினம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமான தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட...

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்;. உலக வலசைப் பறவைகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கான...

நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது. 25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான...

சவுதி அரசாங்கத்தினால் நோன்பு காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு யாழ் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர். யாழ், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிவாசல் எல்லைக்குட்பட்ட மக்களிற்கு பேரிச்சம்பழங்களை பெறுவதற்கு என்றுமில்லாதவாறு குடும்பவிபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தை வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் கடிதம் மூலமாக கேட்டுள்ளார். அத்துடன் குடும்ப...

இளவாலை சிறுவிளானைச் சேர்ந்த அப்புக்குட்டி இராஜேந்திரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இரண்டு புதிய சாதனைகளை படைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிக்க இவர் திருமணம் ஆகிய போதிலும் தனது விளையாட்டுத் துறையின் பால் உள்ள ஆர்வத்தைக் கைவிடாத நிலையில் காணப்படடார். இந் நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர்...

தற்போதைய அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை கூட வழங்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திறைசேரியில் நிதியில்லாமை காரணமாக அரசாங்கம் திண்டாடுகிறது என தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தால்...

20ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்...

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சியின் இயக்குநருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அன்றைய தினம் மாலை 6.30 மணி வரை வாக்களிக்க முடியும் என பொய் செய்தியை தொடர்ச்சியாக ஒளி பரப்பியிருந்தது. இந்த செய்தியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றின் உதவியை நாடியிருந்தார். இதன் வழக்கு விசாரணைக்காக தொலைக்காட்சியின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை...

சட்டவிரோதமாக இந்தியாவின் தமிழ்நாட்டுக்குள் மீனவரின் படகு மூலம் நுழைந்த இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த டி.வினோத்குமார் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு கைதானவராவார். தமிழ்நாட்டின் நாகப்பட்டணம் மாவட்டத்தில் வைத்தே இவர் கைதானார்.

வடமாகாண அதிபர்கள் சங்கத்தின் 'அதிபர்கள் சங்மம் 2015' கலந்துரையாடல் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண அதிபர்கள் சங்கத்தலைவர் க.சிவநேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண பாடசாலைகளில் கல்வியில் நடைமுறை ரீதியில் காணப்படும் குறைபாடுகள், தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிபர்களுடைய கௌரவத்துக்குரிய மதிப்புக்கள் வழங்கப்படவேண்டும். அதிபர் பதவி வெற்றிடங்கள் ஏற்படும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சனிக்கிழமை(09) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருகின்றது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வது தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது....

2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த 'போர் வெற்றி நாள்' ஆயுதப்படைகள் நாள்' என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நாளில், கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் உயர்நீத்த சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - வலி தென்மேற்கு - பண்டத்தரிப்பு - பிரான்பற்று புளியடி வைரவர் ஆலயத்தில் 113 ஆட்டுக் கடாக்கள் பலியிடப்பட்ட விடயமானது, மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான ஆயுதமோதல் முடிந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற சூழலில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. தமிழ் சிவில் சமூகத்தினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது இறந்த தமிழ் மக்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துதவற்கு முன்னைய அரசாங்கம் தடை...

All posts loaded
No more posts