மோ.சைக்கிளின் முன்புறம் பிள்ளைகளை இருத்தி பயணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பெற்றோல் தாங்கியின்மேல் பிள்ளைகளை இருத்திக் கொண்டு பயணிப்பவர்கள் மீது பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.கே.ஜெயவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் - எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து...

நீதிமன்ற தாக்குதல்; 14பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார். அத்துடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில்...
Ad Widget

நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்திய அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம்...

237 ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது...

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு திடீர் சோதனை! தகுதியற்றவைக்கு இடைக்காலத் தடை!!

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள், பஸ்கள், ஓட்டோக்கள் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அரச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் பொலிஸாரும் இணைந்து இன்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது நூற்றுக்கணக்காக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடத் தேவையான ஆவணங்கள், வாகனங்களுக்கான தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. இவ்வாறு போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், தொடர்ச்சியாகச் சேவையில்...

பாடசாலை சமூகத்தால் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியும் – எம்.சிறிதரன்

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக அந்தோனியர் சிலை

நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த...

ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் காலப்போக்கில் இதுபற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிதி...

நாடாளுமன்றம் அடுத்த 7- 10 நாட்களுக்குள் கலைக்கப்படும்

நாடாளுமன்றம் அடுத்த 7அல்லது 10 நாட்களுக்குள் கலைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் யார்?

புதிய அரசு அமையப் பெற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு மேலாகக் கூட்டப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குறித்த கூட்டங்களிலேயே...

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளை கல்லெறிந்து விரட்டிய கும்பல்!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில்...

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுவர் தொழிலை எதிர்ப்போம் என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குழந்தை தொழிலாளர் முறை முற்றாக...

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வரையறை

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாடு செல்லும் பெண்கள், தங்களது குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனும் நடைமுறை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் பெண்களுக்கே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. 5...

புலம்­பெயர் இலங்­கையர் நாட்­டுக்கு வர­வேண்டும்

வெளிநா­டு­களில் புலம்­பெ­யர்ந்­துள்ள இலங்­கை­யர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற பேதம் பாராமல் அனை­வரும் புலம்­பெ­யர்ந்த இலங்­கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது திட்­ட­மிட்ட சில­ருக்கே பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. எனினும் தற்­போது...

ஆட்சியில் இருக்கும்போது அட்டகாசம் செய்யக்கூடாது – முதலமைச்சர் சி.வி.

ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில்...

நாமல் எம்.பி. குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விஜயம்

வாக்குமூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்

கரையொதுங்கிய மனித உருவம்

தலைமன்னார், ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை கரையொதுங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (10) மாலை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர்,குறித்த இடத்துக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்துக்குக் கொண்டு...

வடக்கில் ஐவருக்கு ஒரு இராணுவமா?; பொய் என்கிறார் பிரிகேடியர்

வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதை தான் மறுப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும். வடக்கில் இருக்கின்ற இராணுவத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை...

விசேட அமைச்சரவைக்கு 18 சிறுபான்மை கட்சிகள் யோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, 18 சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்த கூட்டத்தின் போதே தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக 18 சிறுப்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்செட்ச் ஹோட்டலில்,...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மூன்று உணவகங்களை மூட உத்தரவு!

மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம்...
Loading posts...

All posts loaded

No more posts