Ad Widget

காணாமல்போனோர் குறித்து தேர்தலின் பின் அவதானிப்போம் – த.தே.கூ

அரசியல் கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேற்படி கைதிகள், காணாமல் போனோர் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோரின் பெற்றோர்களுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில், வவுனியாவில் திங்கட்கிழமை (06) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரின் நிலைப்பாடுகள் தொடர்பாக கூட்டமைப்பு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தொடர்பான வலியுறுத்தல்களை கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்தே, தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இவ்விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும் என கூட்டமைப்பினர், அவர்களிடம் உறுதியளித்தனர்.

Related Posts