சாவகச்சேரி – மீசாலை மேற்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கையாலபிள்ளை உதயநாதன் எனத் தெரியவந்துள்ளது.
நேற்றயதினம் காலை 07.30 அளவில் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று, பின் வீடு திரும்பியவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.