Ad Widget

யாழில் மாணவி கடத்தல்

யாழ்.விக்டோரியா வீதியில் வைத்து மாணவியொருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். விக்டோரியா வீதியால் வந்து கொண்டிருந்த போது குறித்த மாணவியை வானில் வந்தவர்கள் நேற்று காலை கடத்திச் சென்றுள்ளனர். பூநகரியை சேர்ந்த மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். பூநகரியில் வசிக்கும் இவர், சனி, ஞாயிறு தினங்களில் அரியாலையிலுள்ள உறவினர் வீடொன்றில் தங்கியிருந்து...

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ததேகூ

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில்,...
Ad Widget

சர்வதேச மத்தியஸ்தம் இல்லாத உள்நாட்டு விசாரணையை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்கிறார் சுமந்திரன்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்காது பிற்போடக்கோரும் இலங்கை அரசு, அந்த அறிக்கையை வெளிவராமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...

தனக்கு அச்சுறுத்தல் என்று பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் "உயிருடன் இருக்க விருப்பம் இல்லையா" என்று மிரட்டினர் என்று தெரிவித்து மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார். நேற்றிரவு சில அநாமதேய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தனக்கு அழைப்புக்கள் வந்தன என்றும், அதில் பேசியவர்கள், தான் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி,...

கழிவுகள் கொட்டுவதை நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநகர சபையால் சேகரிக்கப்படும் கழிவுகளை காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் கொட்டுவதை உடன் நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'நீங்கள் ஏ.சி.யில் நாங்கள் மலக்கழிவுகளுக்கு மத்தியிலா', 'மாநகர சபையே குப்பை கொட்டுவதற்கு வேறு...

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறை

வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிவர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கால்நடை அபிவிருத்தி போதனாசியர்களால் மேற்கொள்ளப்படும் முக்கியமான வேலை, செயற்கைமுறை சினைப்படுத்தல் ஆகும். போதனாசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் தனியார்...

ஐ.நா. விசாரணை அறிக்கை; யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதமின்றி மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, யாழில் மாபெரும் பேரணி ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஏ.இராஜகுமாரன், சனிக்கிழமை (14) தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது...

13ஆவது திருத்தத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்: சம்பந்தன்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை...

முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால், யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளின் குடும்ப விபரங்கள், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் என்பன தற்போது திரட்டப்பட்டுகின்றன. இதற்கான படிவங்களை ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள கிராம அபிவிருத்தி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்....

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இந்து பௌத்த கலாசார பேரவையின் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (14) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 580 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்து பௌத்த கலாசார பேரவையில் இதுவரை 6,000 பேர் கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளனர்....

பஷிலிடம் விசாரிக்க இன்டர்போல் உதவி

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்) உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ, கடந்த 11ஆம் திகதி தன்னுடைய மனைவியான புஸ்பா ராஜபக்ஷவுடன் நாட்டைவிட்டு வெளியேறினார். அவர், அமெரிக்க...

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி இருவர் காயம்

ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை பகல் காங்கேசன்துறை வீதி, சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றது. எதிரே வந்த ஓட்டோவை கருத்தில் கொள்ளாது மோட்டார் சைக்கிளைத் திருப்ப முற்பட்டவேளை இந்த விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார்...

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தொழிற்சாலை அமைக்க 12 நிறுவனங்கள் கோரிக்கை

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 3 தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருவதாக யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.சிவகங்காதரன் வெள்ளிக்கிழமை(13) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தரையில் பதிக்கும் சீமெந்து கல் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆணி, பிணைச்சல் உள்ளிட்ட மென் இயந்திரவியல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை...

முல்லைத்தீவு இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச்சேர்ந்த 22 வயதான இளைஞனை குற்றப்புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர் போலி விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்றபோதே டுபாயில் வைத்து அந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டள்ளார். அவ்விளைஞனை டுபாயிலிருந்து நாடு கடத்தியபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர்...

வலி.வடக்கு காணி விடுவிப்பு; திட்டத்தில் மாற்றம்

வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து குறித்த திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை...

மஹிந்தவின் போர் வெற்றி இனி இராணுவத்துககான பாராட்டு விழா!

தமிழீழ விடுதலைப்டிபுலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணியரசு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய...

ஆசிரியரை தாக்கிய யாழ் இந்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கமறியல்

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆசிரியரை கடந்த 9ஆம் திகதி தாக்கிய அதே பாடசாலையை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினார்கள். இது தொடர்பான...

ரவிகரனை ரி.ஐ.டி விசாரணைக்கு அழைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு வருமாறு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு பொலிசார் ஊடாக இந்த அழைப்பாணையை கடந்த புதன்கிழமை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள பயங்கரவாத...

கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிஐடி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு பொலிஸாரால் (சிஐடி) விசாரிக்கப்பட்டுள்ளார். யுத்த காலத்தில் சட்டவிரோதமாக ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே அவர் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காலி துறைமுகத்தில் தடுத்து சோதனையிடப்பட்ட மிதக்கும் ஆயுதக்கிடங்கு மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இருந்த...

‘நம்பகமான விசாரணை வேண்டும்’: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்துள்ள வன்முறைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை புரிந்தவர்களுக்கு எதிராக சுதந்திரமானதும் நம்பகத்தன்மை உள்ளதுமான விசாரணைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் 20 பொது அமைப்புக்களும் இணைந்து கையெழுத்திட்டு...
Loading posts...

All posts loaded

No more posts