Ad Widget

முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்புக்குள் இடமில்லை: சம்பந்தன் திட்டவட்டம்

sampanthanமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரர் என்.வித்தியாதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதால் கட்சிக்கு பாரிய சிக்கல் நிலை உருவாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசிவரும் இச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைந்துக்கொள்வது உசிதமானதல்ல. ஆகையினால் இந்த முடிவினை கூட்டமைப்பு ஒvithiatharanருபோதும் எடுக்காது என சம்பந்தன் ஐயா எங்களிடம் தெரிவித்தார்.

அத்தோடு, கே.பி., கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் இணைந்து உளவு வேலைகளில் ஈடுபடுவதுபோல் நீங்களும் ஈடுபடப்போவதாக கூறுகிறார்கள். ஆனால், அதனை நாங்கள் நம்பவில்லை என்றும் சம்பந்த ஐயா எங்களிடம் தெரிவித்தார். அதற்கு, பியசேன போன்றவர்களும் உங்களின் கட்சியில்தான் இருக்கிறார்கள். அதேபோல் சுயநலத்துக்காகவும் பணத்துக்காகவும் தமிழ்த் தேசியத்தை விலைபேசும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அதனை நாங்களும் நம்பவில்லை என பதில் கொடுத்தோம்” என்று வித்தியாதரன் மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய சந்திப்பில் முன்னாள் போராளிகள் வித்தியாதரன் தலைமையில் கூட்டமைப்பு தலைமையிடம் பேசியவேளை

vithi

 

Related Posts