Ad Widget

வேட்புமனுவை வழங்க மஹிந்தவுக்கு 10 நிபந்தனைகள்! ஏற்றுக்கொள்வாரா? மாட்டாரா?

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்று கட்சியின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஐயக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவின் அறிவிப்பு சுதந்திரக்கட்சியின் முடிவல்ல என்றும் சுதந்திரக்கட்சி வேட்பு மனுவை வழங்குமா என்பதை அதன் முத்திய குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறப்படுகின்றது .

இதற்கிடையில் 10 நிபந்தனைகளுக்கு உட்பட்ட விதத்திலேயே மஹிந்தவுக்கு வேட்பு மனு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் மஹிந்தவை பொறுத்தவரை அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனியாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகவும் தேர்தல் களத்தில் போட்டியிடலாம் என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

Related Posts