செம்மணி விபத்தில் ஒருவர் சாவு!

செம்மணி வீதியில் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் மோட்டார்சைக்கிளும் கலோட்ரஸ்ட் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். விபத்தில் பு.துஷிதரன் (வயது-25) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது

சட்டவிரோத குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜர் ஆகக்கூடாது என யாழ்.பல்கலைக்கழக சமூகம் சபதம் எடுத்துள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலை நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கண்டன போராட்டத்தின் பின்னரே யாழ்.பல்கலைக்கழக சமூகம் அவ்வாறு சபதம் எடுத்துக்கொண்டது. அத்துடன் அவ்வாறான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆகும் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான மாபெரும்...
Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 18...

பூங்குடுதீவு மாணவி கொலை: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்

புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த கொலையாளிகளுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கண்டன போராட்டம் யாழ்ப்பாணப்...

ஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரிடம் மோசடி செய்தவர் சிக்கினார்!

ஈ-சற் பணப்பரிமாற்றம் மூலம் பலரை ஏமாற்றிய ஒருவரை இளவாலைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். பண்டத்தரிப்பை சேர்ந்த இருவர் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த சந்தேக நபருக்கு ஈ-சற் முறையில் பணத்தை அனுப்பி ஏமார்ந்தனர். அவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தை நீதிமன்றின் அனுமதியுடன் விசாரணைகளை நடத்தியே பொலிஸார்...

போரில் உயிர் நீத்தோருக்காக விளக்கேற்றி அஞ்சலிப்போம்! அனைத்து தமிழர்களுக்கும் கூட்டமைப்பு அழைப்பு!!

மே 18 ஆம் திகதி, போரில் உயிர் நீத்தோர் நினைவாக - அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக, விளக்கேற்றி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், "உயிர் நீத்தோருக்கு ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப்...

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசுக்கு ஒத்துழைக்க மாடடோம்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு!!

"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். "எமது பிரதான எதிரி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவரை ஒன்றிணைத்து எதிர்கால அரசியலை மேற்கொள்ள முடியாது....

வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வியாபார முகாமைத்துவ இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2014 - 2015 ஆம் கல்வியாண்டில் வியாபார முகாமைத்துல இளமாணி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும்...

கண்டெயினருடன் மோதிய யாழ் தேவி – ரயில் போக்குவரத்து பாதிப்பு

பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில்...

புங்குடுதீவு மாணவி கொலைக்கு குடும்பப் பகையே காரணம் என்கிறது பொலிஸ்

குடும்பப் பகையே புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்னர். புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவியின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். அவர்கள் மூவரும் மாணவியின் உறவினர்கள் ஆவர். பொலிஸாரின் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான்...

புங்குடுவுதீவு மாணவி படுகொலையை கண்டித்து யாழ்.பல்கலையில், கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்!

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதேவேளை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகளும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி...

இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை...

யாழில் மீன் மழை

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (14) மாலை மீன் மழை பொழிந்துள்ளது. நல்லூர் அம்மன் கோவில் பிரதேசத்திலும் பருத்தித்துறை விதியின் சில பகுதிகளிலுமே இந்த மீன் மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொட்டும் மழையிலும் யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார நினைவு நாள் இன்று யாழ். உலகத் தமிழராய்ச்சி மாநாட்டினில் உயிரிழந்தவர்கள் நினைவு தூபி முன்பாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மேலும் குறித்த நினைவு நாள் வாரத்தை அனுஸ்டிப்பதற்காக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன் ,சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்....

கையெழுத்திட்டார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று பருத்தித்துறையில் இன்று யாழில்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நினைவு நாள் நேற்று பருத்தித்துறை முனை பகுதியில் வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சஜீவன், சதீஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று 15ம் திகதி யாழ்.முற்றவெளியில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு...

மே- 18 நினைவேந்தல் எம் உணர்வுகளால் உறவுகளுக்கு அஞ்சலி – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

கொத்துக் கொத்தாக எம் உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப்போரின் ஆறாத ரணங்களைச் சுமந்ததாக மீண்டும் எம் கண் முன்னே விரிந்துள்ளது இந்த வலி சுமந்த வாரம். இழப்புக்களையும் ஈவுகளையுமே நிலையாகப் பெற்ற எம் இனத்தை ஒரே வட்டத்துக்குள் அடக்கி, தொடர்கிறது அடக்குமுறை நெருப்பு. எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயம் இன்றளவும் நியாயப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றது. இந்நிலையில்...

மே 18 இல் உறவுகளை நினைவுகூருங்கள்! – தமிழர்களின் கடமைக்கு தடை ஏதுமில்லை!!

"வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமையாகும், கடமையாகும்." - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது!

ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்ட காணாமல் போன யுகம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றினை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த இரு தினங்களாக இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற வெகுசன ஊடக சீர்திருத்தங்கள் பற்றிய தேசிய மாநாட்டின் இறுதி அமர்வில் நேற்று (14) கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்...
Loading posts...

All posts loaded

No more posts