- Thursday
- September 18th, 2025

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று முதல் 234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார். 335 உள்ளூராட்சி சபைகளில் 234 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 65 உள்ளூராட்சி...

யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவுகூரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் ஊடகங்களில் செய்தி வெளியிடும்போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்ற நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் 19ம் திகதி இராணுவ வீரர்கள் நினைவுகூரப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்....

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ஆம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் இன்றுமதியம் கண்டன ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவ, மாணவிகள், பொதுமக்களினால் நடாத்தப்பட்டது. இதன்போது புங்குடுதீவின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு...

மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவனின் கையை வெட்டிய குற்றச்சாட்டில் மேலும் 3 சந்தேகநபர்களைக் வியாழக்கிழமை (14) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்தார். சந்கேதநபர்களிடமிருந்து 3 வாள்கள், முச்சக்கரவண்டி, 2 மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டன. மேற்படி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

வடமாகாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் பஸ்களுக்கான சீரான நேசசூசியை அறிமுகப்படுத்தி இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். யாழ். நாவலர் வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,...

கழிவு எண்ணெய் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாதாந்தம் சுமார் 1 மில்லியன் ரூபாய் செலவு செய்து வருவதாக வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் வியாழக்கிழமை (14) தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு இருப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்களால் உறுதிப்படுத்தப்பட்டு,...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மே 18 திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை பிரமாண்டமான முறையில் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். தமிழீழ வரலாற்றில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள், போராளிகளை அன்நாளில் ஒவ்வொரு தமிழ் மகனும், உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்க வேண்டும் என்றும் அவர்...

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமையும். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய பூமித் தட்டுப்பகுதி காணப்படுகின்றது. 50 மில்லியன் ஆண்டுகளாக...

ப்ளாஸ்ரிக் தராசுகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான தராசுகளை உபயோகிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுத்தல் அளவைச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமசிறி குமார தெரிவித்தார். இவ்வாறான தராசுகளில் நிறுக்கப்படும் தின்பண்டங்களை வாங்குவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோரிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. முத்திரையிடப்பட்ட தராசுகள் வர்த்தக...

யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை...

சமுர்த்தி முத்திரை வழங்குவதற்கான மீளாய்வின் போது தெரிவு செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, புதன்கிழமை (13) சந்தித்து முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது பாதிப்புக்களை எடுத்துக் கூறியுள்ளனர். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர்...

உள்ளூராட்சி மன்றங்களில் கீழ் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் மத்திய அரசோ அல்லது மாகாண அரசோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களை விடுத்து துறைசார்ந்த நிபுணர் குழுவை விசாரணைக்கு நியமித்து இந்த ஊழல் மோசடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரைநகர்...

மனித உரிமை பாதுகாப்பாளர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதோடு அச்சுறுத்தல்களுக்கும் உட்படுவதாக மனித உரிமை பாதுகாப்பாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். மனித உரிமை பாதுகாப்பாளர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டியை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (13) மனித உரிமை ஆணைக்குழு யாழ். காரியாலயத்தில் இடம்பெற்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் கல்வி...

கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்து வந்த சிலர் நேற்று (13) நாடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இவ்வாறு நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்...

துன்னாலை பூதராயன் வீதியில் வீதி விளக்குகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, கரவெட்டிப் பிரதேச சபை மின்சார ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 12.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கரணவாய், அண்ணா சிலையடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சுதர்சன் (வயது 42) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம்...

இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை சீனன்குடாவைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (12) மாலை காங்கேசன்துறையை வந்தடைந்ததாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யபட்ட இந்த மீனவர்கள், இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வரஹே நுவான் சானக (வயது 24), ரவுன்ரா...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 37பேரையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை, வயோதிபரை...

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக...

All posts loaded
No more posts