Ad Widget

மாணவர்களே அவதானம்! விழிப்பாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர்

யாழ்.மாவட்டத்தில் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பாடசாலை மட்டத்தால் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று இன்று ஆரம்பமாகி செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் முதற்கட்டமாக இன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கிற்கு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்.

மேலும் குறித்த மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய கடமைகளை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.உங்களுடைய பொறுப்பை செய்து எங்களுக்கு ஒத்துழைப்பீர்களானால் நாட்டில் சமாதானத்தை உருவாக்க முடியும்.

மேலும் உங்களது பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சில காரணிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.குறிப்பாக அறிவு,பயிற்சி,தன்னம்பிக்கை என்பன உங்கள் மத்தியில் கட்டியெழுப்பப்படும் மிகவும் முக்கியமான காரணிகள் ஆகும்.

இதேவேளை மாணவர்கள் மத்தியில் போதைவஸ்துகளை விற்பனை செய்யும் கும்பல் இருக்கின்றது.ஐஸ்கிறீம், கயூ,கடலை போன்ற உணவுகளிலும், வெற்றிலை ,வீடா போன்றவை நீங்கள் உண்பீர்கள் அதில் கவனமாக இருப்பதுடன் நீங்கள் தற்போது கவனமாக இருக்க வேண்டிய கால நேரம் வந்துவிட்டது.

ஆதலால் எதிர்வரும் காலங்களில் பெற்றோருடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளேன். மாணவர்களே உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமானது. 2 அல்லது 3 நிமிடங்களில் கொள்ளையர்கள் உடைமைகளை கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். அதிலும் நீங்கள் அவதானமாக இருங்கள்.

எனவே எதிர்காலத்தில் மாணவர்களாகிய நீங்கள் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts