Ad Widget

யாழில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் நடுப்பகுதியில் பெய்த மழை காரணமாக வெங்காயச் செய்கையானது அழிவடைந்தமையால், தற்போது ஒரு அந்தர் (அண்ணளவாக 50 கிலோ) வெங்காயம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வலிகாமம் பகுதியில் அதிகளவான வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளன. இதனால் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

வடமராட்சிப் பகுதியில் செய்கை பண்ணப்பட்ட வெங்காயத்தில் குறிப்பிடத்தக்க அளவு வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளதால், அவற்றைக் விதை வெங்காயத்துக்காக கொள்வனவு செய்வதற்காக வலிகாமம் பகுதி விவசாயிகளும், புத்தளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் வடமராட்சி விவசாயிகளிடம் வெங்காயம் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மே மாதம் கடைசிப் பகுதியில் 4 ஆயிரம் ரூபாயாகவிருந்த ஒரு அந்தர் வெங்காயம், தற்போது அதிகரித்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Related Posts