Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு முடிவுக்கு வந்தது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 10 இடங்களில் 6 இடங்களில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள்,டெலோ 1 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட் 1 ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தமிழரசுக்கட்சி 4 இடங்களுக்கும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் ஆகியவற்றுக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 8 இடங்களில் தமிழரசுக்கட்சி 5 இடங்களிலும், டெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். புளொட் தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் 10 இடங்களில் 5 இடங்கள் தமிழரசுக்கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப் 2 ஆசனங்கள் டெலோ 2 ஆசனம் புளொட் 1 ஆசனமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts