யாழ்ப்பாணத்தில் குறுகிய காலத்தில் போதைப் பொருள் கடத்தல்கள், மீட்டர் வட்டி மற்றும் கப்பம் போன்றவற்று மூலம் திடீர் பணக்காரர்களாக மாறி சொத்து குவித்த சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலரது சொத்து விவரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நீதிமன்றம் மூலம் சமர்ப்பிக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது சொத்து விவரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காதவர்களின் சொத்துக்கள் விரைவில் நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.