Ad Widget

பெண்களுக்கு எதிராக வன்முறை: நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு நீதிக்கோரி யாழ். பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். வேம்படி சந்தியில் தற்போது கூடியுள்ள குறித்த பெண்கள் அமைப்பினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள், வலையமைப்புக்கள் போன்றவற்றுடன் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என நம்பும் பொது அமைப்புகளும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல பாலியல் வன்முறைகளுக்கான நீதி தாமதமாகுதல் தமக்கு கவலை அளிப்பதாகவும், இவ்வாறான காலதாமதம் வன்முறையிலிருந்து உயிர்த்தப்பிய பெண்கள் மற்றும் கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினரது இயல்பு வாழ்க்கை மற்றும் எதிர்க்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. அதுமட்டுமின்றி இவ்வாறான காலதாமதம், குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதுடன், வன்முறைகளை தூண்டுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனவே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் விரைவில் நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுமட்டுமின்றி பெண்களது மேம்பாட்டிற்கும் கௌரவமான வன்முறையற்ற வாழ்வையும் சட்டத்துறை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Posts