Ad Widget

20 பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றாலும் அமுல்படுத்துவது எளிதல்ல

புதிய தேர்தல் முறை­யா­னது எழுத்து வடிவில் கிடைக்­கப்­பெறும் வரையில் அதில் உள்­ள­டக்கம் குறித்து தெளிவ­டைந்­து­வி­ட­மு­டி­யாது. புதிய தேர்தல் முறைமை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டாலும் அதனை அமுல்­ப­டுத்­து­வ­தென்­பது எளி­தான காரி­ய­மல்ல.

எனவே அடுத்து இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் புதிய முறையில் அல்­லது தற்­போது அமுலில் உள்ள விகி­தா­சார முறையின் ஊடா­கவே இடம்­பெறும் சாத்­தியம் தென்­ப­டு­ப­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும்,திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்வி ஒன்­றி­லேயே இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் அதில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, புதிய தேர்தல் முறை­யா­னது எமக்கு எழுத்து வடிவில் கிடைக்கப் பெற­வில்லை. எழுத்து வடிவில் கிடைக்­கப்­பெற்றால் மாத்­தி­ரமே அதனை படித்து தெ ளிந்து உறு­தி­யான கருத்­துக்­களை வெ ளியிட முடியும். 20ஆவது திருத்தம் தொடர்­பிலும், அதில் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்­பிலும், இன்னும் கூற­போனால் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கடந்த சில வாரங்­க­ளாக பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகவே இது எழுத்து வடிவில் கிடைக்­கப்­பெற்­றாலே அதி­லி­ருந்து எத­னையும் தெ ளிவ­டைய முடியும்.

வடக்கு – கிழக்கை பொறுத்­த­வ­ரையில் அதில் இடம்­பெற்­றுள்ள இடம்­பெ­யர்வு கார­ண­மாக வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை வெகுவா குறைந்­துள்­ளது. வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை குறைந்­தி­ருப்­பதன் நிமித்தம் விசே­ட­மாக யாழ். தேர்தல் மாவட்­டத்தில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை கணி­ச­மாக குறை­வ­டை­யலாம்.

யுத்­தத்தின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்ள மக்கள் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு விரும்­பு­கின்ற போதிலும், அவர்­க­ளு­டைய காணி­களில் இரா­ணு­வத்­தினர் நிலை ­கொண்­டுள்­ளனர். இதனால் மக்கள் மீள்­கு­டி­யே­ற­மு­டி­யாத நிலை இருந்து வரு­கின்­றது. வடக்கு – கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் அங்­கி­ருக்­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை பேணப்­பட வேண்டும். அப்­ப­டி­யில்­லாது புதிய தேர்தல் முறை­யி­னூ­டாக எமது பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்கு முடி­வெ­டுக்­கப்­ப­டு­மானால் அது நியா­ய­மா­ன­தாக இருக்­காது.

இது இவ்­வா­றி­ருக்க வடக்கு – கிழக்­கிற்கு வெ ளியே உள்ள நிலை­மை­களைப் பொறுத்­த­வ­ரையில், குறிப்­பாக முஸ்­லிம்­களும் மலை­யக தமிழ் மக்­களும் பர­வ­லாக வாழ்ந்து வரு­கின்­றனர். அவ்­வா­றான மக்கள் தமது பிர­தி­நி­தி­களை தெரி­வு­செய்­யக்­கூ­டிய வகையில் புதிய முறை­மையில் அமை­ய­வேண்டும். அதற்­கான ஒழுங்­குகள் இதில் உள்­வாங்­கப்­ப­டு­தலும் அவ­சி­ய­மா­னது.

புதிய தேர்தல் முறை­யி­னூ­டாக தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­பாக தேர்தல் தொகு­தி­களை நிர்­ண­யிக்­கப்­பட­வேண்­டிய தேவை இருக்­கி­றது. தேர்தல் மாவட்­டங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்டு அதன் பின்னர் தேர்தல் தொகு­திகள் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு முன்­பாக இவற்றை மேற்­கொள்­­வ­தற்கு தேர்தல் நிர்­ணய சபை ஒன்று நிறு­வப்­ப­டுதல் பிர­தா­ன­மா­னது. நிறு­வப்­ப­டு­கின்ற தேர்தல் நிர்­ணய சபை­யா­னது கட்­சி­க­ளு­டனும், சமு­கங்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும், பேச்­சு­வார்த்­தை­க­ளையும் மேற்­கொண்டு தீர்­மானம் ஒன்­றிற்கு வர­வேண்டி உள்­ளது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்தில் புதிய பாரா­ளு­மன்றம் ஒன்றை அமைக்­க­வேண்டும் என்ற ரீதி­யில கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றது. அவ்­வாறு புதிய தேர்தல் முறை­யா­னது பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக்கொண்டு அது நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட அவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற 20 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவது அவ்வளவு எளிதான விடயமாக இருக்காது. புதிய தேர்தல் முறைமையை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால் தற்போது அமுலில் இருக்கின்ற பழைய முறைமையின் பிரகாரமே அடுத்த தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts