Ad Widget

புங்குடுதீவு விவகாரம்: உயர்பொலிஸ் அதிகாரி குறித்து சி.ஐ.டி விசாரணை

புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் இரண்டு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற அண்மைய நாளொன்றில் அந்த சந்தேகநபரை கிராமத்தவர்கள் பிடித்து உப-பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை பொலிஸ்நிலையத்துக்கு கொண்டுவந்ததன் பின்னர், இந்த சந்தேகநபர், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் அல்ல என்று உயர்பொலிஸ் அதிகாரி தெரிவித்தததாகவும். அந்த உயர் அதிகாரி கூறியதன் பிரகாரம் சிறு முறைப்பாட்டு பிரிவு வாக்குமூலத்தை பெற்றுகொண்டு அச்சந்தேகநபரை விடுவித்ததாக பொலிஸூக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட சந்தேகநபரே, வெள்ளவத்தையில் வைத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் டுலரினால் பின்னர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts