Ad Widget

ஆசிரியர் தாக்கி காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்!

வரணிப்பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் அந்தரங்க உறுப்பில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இதே இடத்தைச் சேர்ந்த க.கஜிதீபன் (வயது 15 ) என்ற மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பாடசாலையில் சிரமதானப்பணி இடம்பெற்ற சமயம் ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவனைத் தாக்கியதிலேயே அவன் காயமடைந்தான் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வைத்திய சாலை பொலிஸார் ஊடாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Related Posts