Ad Widget

தமிழர் இனப்பிரச்சனையில் ஏற்கப்பட்ட திம்புக்கோட்பாடு இன்று 30 வருட நிறைவை காண்கிறது

1980 களில் நிலவிய‌ பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய் விட , எனைய போராளித்தலைமைகள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றமையினால், திம்பு பிரகடனத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டி வந்திருந்தது.

13.07.1985 இல் திம்பு பேச்சுவார்த்தையில் EPRLF, EROS, PLOT, LTTE, TELO , TULF ஆகிய அமைப்புக்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் வருமாறு
1)சிறிலங்காவில் தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதை அங்கீகரித்தல்.
2) சிறிலங்காவில் தமிழர்களுக்கான அடையாளப்படுத்தப்பட்ட தயகத்தின் இருப்பை அங்கீகரித்தல் .
3)சிறிலங்காவில் தமிழ் தேசத்திற்கான‌ சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்
4)இந்த தீவை தமது நாடாக கருதுவோர் அனைவருக்குமான அடிப்படை உரிமையை அங்கீகரித்தலும் , அவர்களுக்கான‌ குடியுரிமையை அங்கீகரித்தலும்.

திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும். இப்பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 8இல் ஆரம்பமாகியது.

இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்கு பற்றிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts