Ad Widget

வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுவிஸ் ஆசாமி பொலிஸ்பிடியிலிருந்து தப்பித்து எப்படி வெள்ளவத்தை சென்றார் என்பது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவன், சம்பவதினம் தான் கொழும்பில் இருந்ததாக கூறிய விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் 13ம் திகதி மாணவி வித்தியா காணமல் போய், மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த கொடூரத்தை புரிந்த காமுகர்கள் பின்னர் கைதாகினர்.

இதுதவிர, சுவிசிலிருந்து வந்து இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டதாக கூறப்பட்ட ஆசாமி குமார் என்பவனை மக்கள் பிடித்து தர்மஅடி அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். எனினும், அவன் வெளியில் வந்து நாட்டைவிட்டு தப்பிச் செல்லவிருந்த நிலையில் மடக்கிப்பிடிக்கப்பட்டான்.

இந்த விவகாரங்கள் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த தவணையின்போது நீதிமன்ற உத்தரவுப்படி குற்றவாளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts