உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடேசன், புலித்தேவன் உறவினர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து...

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் ஆரம்பம்!!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன்...
Ad Widget

த.தே.கூ ஆசனப்பங்கீடு யாழ், திருமலை இணக்கம்; வன்னி, மட்டு மீண்டும் இழுபறியில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் வன்னித் தேர்தல் மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் ஆகியவற்றில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. ஏனைய மாவட்டங்களின் ஆசனப் பங்கீடு தொடர்பில் நேற்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. த.தே.கூ அங்கத்துவ கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது . இதன்போதே இணக்கம் காணப்பட்டது. மேலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல்...

சுதந்திரக் கட்சியினர் சிலரை திருப்திப்படுத்த மைத்திரி அரசு தற்போது செயற்படுகிறது! அமைச்சர் ஹக்கீம் யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டு!

சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்படுகிறது. எனவே சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய 20ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தால் நாம் அனைவரும் இணைந்து எதிர்ப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம். தேசிய நீர்வழங்கல்...

சுமந்திரனும் டக்ளசும் மின்னலில்

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சித் திட்டம்

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்,நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கான யோகா பயிற்சி, யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து...

யாழில் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 17 பேர் விளக்கமறியலில்

யாழ். கொடிகாமம் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை...

கனடாவில் இலங்கையர்களின் குடியுரிமை பறிபோகுமா?

கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான குடியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாக நடத்தப்படுவர். கனேடிய மக்களை பாதுகாப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம்...

த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர...

யாழில் சர்வதேச யோகாதினம்!

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகாதினம் இன்று(21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுமுகமாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகமானது மாபெரும் யோகாபயிற்சி நிகழ்வொன்றினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதனடிப்படையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இந்திய துணைதூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த யோகா தின நிகழ்வில் கல்வி...

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அச்சுவேலி வடக்கு மடத்தடி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார். தனது 14 வயது மகளை அயல்வீட்டுக்காரர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தர் என்ற பொய்யான வதந்தியை நம்பி யாருடைய முறைப்பாடும் இல்லாமல் பொலிஸார், மகளை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றமை மற்றும் நீதிமன்ற...

திருமணம் நடைபெறவிருந்த யுவதி கடத்தல்

திருமணம் நடைபெறவிருந்த யுவதியொருரை இனந்தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற சம்பவம் சனிக்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மூளாயைச் சேர்ந்த யுவதிக்கும் கனடாவைச் சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (21) பதிவுத் திருமணம் நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாப்பிள்ளை வீட்டாரின்...

புனர்வாழ்வு காலத்தை குறைக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை

நீண்டகாலமாக தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்து, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் தங்களின் புனர்வாழ்வுக் காலத்தை குறைக்குமாறு மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புனர்வாழ்வு பெற்றுவரம் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் 52பேரை, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

வடக்கு விவசாய விரிவாக்கத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் சேவைகளுக்கென தொழில்நுட்ப உதவியாளர்கள் 14 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கடிதங்களை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (20.06.2015) வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றும்போது, விவசாயப் போதனாசிரியர் பதவி நியமனம் பெறுவதற்கு விண்ணப்பதாரி க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல்...

குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க தனி தொலைபேசி இலக்கம்

குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க யாழ் மாவட்ட செயலகத்திற்கு என தனி தொலைபேசி இலக்கம் வழங்கப்படவள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கல்வி அமைச்சின்...

வித்தியா வழக்கு குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தவராஜா முயற்சி – துவாரகேஸ்வரன்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் வகையில் சட்டத்தரணி கே.ரி.தவராஜா வழக்கில் ஆஜராகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட...

மஹிந்தவுக்கு ஹெலிக்கொப்டர் வழங்கப்படவில்லையாம்!

தனது பயண வசதிகளுக்காக ஹெலிக்கொப்டர் வழங்கப்பட்டதாக வௌியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது ஊடக இணைப்புச் செயலாளர் ரோஹான் வெலிவிட வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 9ம் திகதி கொழும்பில் இருந்து தங்காலை நோக்கி முன்னாள் ஜனாதிபதி என்ற...

குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகம் 24 மணிததியாலங்கள் விரைவில் இயங்கும்

தற்போது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயங்கி வரும் குறிகட்டுவான் பொலிஸ் கண்காணிப்பகத்தை 24 மணிநேரமும் மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என வடபிராந்திய பொலிஸ் மா அதிபர் ஈ.கே.பெரேரா தெரிவித்தார். யாழ். சிவில் பாதுகாப்பு கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை (19) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, ஐக்கிய தேசியக்...

புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குவதாக அறிக்கை!

2009ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில்...

மாதகல் பகுதி மக்களுக்கு மலேரியா தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை!

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மாதகல் பகுதியில் உள்ள மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இப்பகுதியிலிருந்து மலேரியா நோயாளி ஒருவர் இரத்தப்பரிசோதனை மூலம் இனங்காணப்படதை தொடர்ந்தே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வந்த மாதகலைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர்...
Loading posts...

All posts loaded

No more posts