Ad Widget

புகையிரத நிலைய சொத்துக்களை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறை, மலசலகூட அறைக்கதவு ஆகியவற்றை உடைத்த 28 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதிநந்த சேகரம், வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.

நாவற்குழி தச்சந்தோப்பு புகையிரத நிலையத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை (14), மதுபோதையில் வந்த குறித்த நபர் மதுப்போத்தலாலும் கைகளாலும் புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அறை, மலசலகூட அறைக்கதவு ஆகியவற்றை உடைத்துள்ளார்.

இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் புகையிரத நிலைய அதிகாரிகளால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார், வீதியில் குறித்த நபரின் கைகளால் வழிந்த இரத்தத்தை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்து கைது செய்திருந்தனர்.

இவரை பொலிஸார், வியாழக்கிழமை (16) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பொதுச் சொத்தை சேதம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.

Related Posts