Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தாதியர் விடுதி : அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டடத்தை தாதியர் விடுதியாக பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1750 உறுப்பினர்களைக் கொண்ட பணியாளர் தொகுதியைக் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது.

இவர்களுள் 407 பேர் தாதிய அலுவலர்கள் ஆவர். அவர்களுக்கான போதிய தங்குமிட வசதிகள் இல்லாததன் காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Posts