Ad Widget

பிரதமரின் விஜயம் குறித்து முதலமைச்சருக்கு அறிவிக்கவில்லை – சி.வி.கே

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் அதனாலேயே அந்நிகழ்வுகளில் முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்றும் வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவைத்தலைவர், 'அரசாங்கத்துக்கும் வட மாகாணசபைக்கும் இடையில்...

பெற்றோரை தாக்கியதால் பொறுமை இழந்து கோடரியால் தாக்கினேன்

வீட்டுக்கு வந்து தனது பெற்றோரை கடுமையாகப் ஏசி, அவர்களை தாக்கியதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கினேன் என்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் இஷார லக்மால் சபுதந்திரி தெரிவித்துள்ளார். வெலி ராஜு என்றழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவின் படுகொலைச் சந்தேகநபராக லக்மால் சபுதந்திரி, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார்...
Ad Widget

பசில் வந்திறங்கியவுடன் கைதுசெய்யுமாறு உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, உத்தரவிட்டுள்ளார். அவர், இந்த நாட்டுக்குள் வந்ததன் பின்னர் கைது செய்யுமாறு, நீதிமன்றத்தினால் முன்னர் உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து அவரை கைது செய்யாமல், தன்னுடைய சட்டதரணிகள்...

வட மாகாண சபைக்கு படிப்படியாக அதிகாரம் வழங்கப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையினால் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றுள்ளது. மாகாணசபைக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், வடக்கு மாகாணசபை பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற நிலையில் முதற்...

மஹிந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டிலுள்ள சில பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்...

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடியை நிறுத்தும் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது -டக்ளஸ்

இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான இழுவைப்படகுத் தொழில்முறையை வடபகுதியில் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளமையை எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வரவேற்பதாக ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வடபகுதிக் கடற்றொழிலாளர்கள் சுனாமி அனர்த்தம் மற்றும் நீண்டகால...

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலானஅக்கறை கொண்டிருந்தார்கள் – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (30.03.2015)இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...

போக்குவரத்து சபை பஸ் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இன்று திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார். முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில்...

நாயாற்றில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும்படி பிரதமரிடம் வேண்டுகோள்

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர்...

டெங்கு பரவ இடமளித்தோருக்கு எதிராக வழக்கு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வலியுறுத்தினர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்....

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம்

வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே 15 வரை நீடிப்பு

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல்...

வடக்கில் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைப்பு!

வடக்கு மாகாணத்தில், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களாக 248 பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமயில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ஏற்கனவே இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளின் அடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சினால்...

பிறந்த குழந்தைகளின் செவிப்புலனை பரிசோதிக்கும் இயந்திரம் அறிமுகம்!

இலங்கையில் பிறக்கும் சிசுக்களின் செவிப்புலன் நிலமையைப் பரீட்சிப்பது தொடர்பான முதலாவது இரண்டு நாள் செயலமர்வு இன்று (30) கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் ஆஸ்பத்திரியில் ஆரம்பமாகின்றது. இலங்கை நாட்டில் முதல் முறையாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக செவிப்புலன் பரீட்சிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயலமர்வின் இரண்டாம் நாளான நாளை (31ம் திகதி) முற்பகல் 11.00 மணிக்கு...

யாழ். மாநகரசபை சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பு

யாழ். மாநகரசபை சாரதிகள் தமக்கான மறுக்கப்பட்ட 8 அடிப்படை உரிமைகளை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அகில இலங்கை ஸ்தல ஸ்தாபன சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் நிரந்தர நியமனம் பெற்று வாகனப் பகுதியில் கடமையாற்றுகின்ற அனைத்து சாரதிகளுக்கும் பதில் சாரதிகள்...

மஹாபொல மீண்டும் 2500 ரூபா: புதிய அரசாங்கம் மீது மாணவர்கள் கடுப்பில்!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் புதிய அரசாங்கத்தால் 2500வரை குறைக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் 4000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட மஹாபொல புலமை பரிசில் புதிய அரசாங்கத்தால் 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் அது செயற்படுத்தப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர்...

இலவச WiFi ஆரம்பம்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (30) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு - புகையிரத நிலையத்திற்கு அருகில் நடைபெற்றது. இதில் அமைச்சர், பிரதி அமைச்சர்களான மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ஹர்ச டி சில்வா, எரான், ரஞ்சித்...

வடமாகாணத்துக்கு புதிதாக 160 தாதியர்கள் நியமனம்

வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்காக 160 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை திங்கட்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். நியமனம் பெறுபவர்கள், வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்றவாறு பணிக்கு அமர்த்தப்படுவர். வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்படி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த நியமனங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts