இராஜ அணிகலத்தின் மறுவடிவமைப்பு குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு.
யாழ்ப்பாணத்து அரச குடும்பத்தின் இராஜ அணிகலமானது 24 ஜூன் 2015 இன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இராஜ அணிகலமானது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இவ் இராஜ அணிகலமானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு இராஜ அணிகலமானது அதன் மரபுகள்,பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று தகவல்களுக்கமைய மறுவடிவமைக்கப்பட்டது. பாரம்பரிய கூற்றின்படி அதன் சின்னங்களும் அச் சின்னங்களின் இராஜ ஒழுங்கமைப்புக்களும் ஸ்ரீ இராமனால் அருளப்பட்டதாகும். இந்தியாவின் தென்கிழக்கு கரையோர (செது) பகுதியில் பிரபல்யமாக திகழ்ந்த ஒரு புனித தளமான இடத்தின் அடையாளத்தை இவ் அரசவையானது தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்தது.
இராஜ அணிகலத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: –
நறுமணமுடைய துளசி மாலையை சேர்த்துக்கொள்ளுதல், அரச குடை சின்னத்தை மாற்றி வரைதல், செம்பிறை, வட்ட வடிவமுள்ள சூரியன், சேது என்ற தமிழ் வார்த்தை செது எனும் தமிழ் வார்த்தையாக மாற்றப்படுதல், இச் சின்னங்களை தாங்கியிருக்கும் கவசமானது மாற்றி வடிவமைக்கப்பட்டு பழுப்பு சிவப்பு (Maroon) நிறம் கொண்ட அரக்கு நிற சால்வை நீக்கப்படுதல்.
அரச கொடியின் மறுவடிவமைப்பு குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு
யாழ்ப்பாணத்து அரச குடும்பத்தின் அரச கொடியானது 24 ஜூன் 2015 இன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் அரச கொடியானது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இவ் அரச கொடியானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு செய்யப்பட்டது.
2015ஆம் ஆண்டு அரச கொடியானது அதன் மரபுகள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று தகவல்களுக்கமைய மறுவடிவமைக்கப்பட்டது. வரலாற்றுக் கூற்றின்படி நந்திக் கொடியானது ஸ்ரீ இராமனால் வழங்கப்பட்டதாகும். அரசவையானது அதன் மூலவடிவமைப்பை தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்தது.
அரச கொடியில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: –
செம்பிறை மற்றும் வட்டவடிவமான சூரியன் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. அரச குடை, சங்கு மற்றும் கொடியின் வெள்ளை நிற உட்கரையானது அகற்றப்பட்டுள்ளது. அரச கொடியின் மையத்தில் ஆழ்ந்த சிவப்பு (Magenta) நிறத்தினால் எல்லைக்கோடு செய்யப்பட்ட வெற்றி வாகை சூடிய அமர்ந்த நந்தி உள்ளது. நந்திக்கு மேலாக செம்பிறையும் சூரியனும் குங்கும சிவப்பு (Saffron) நிற பின்னணியில் உள்ளது. வெற்றி வாகை சூடிய நந்திக் கொடியானது யாழ்ப்பாண இராச்சியத்தின் பெருமைக்குரிய சின்னமாகும். இன்று இவ் அரச கொடியானது பறப்பதனை காணும்போது நம் பண்பாடு, கலாசாரங்கள் நிறைந்த இராஜ்ஜியத்தின் பெருமையை மனதிற்கொண்டு அக்கொடியுடன் நாமும் பறக்க முடியும்.