Ad Widget

எண்ணெய் கசிவு விவகாரம்; 8 பேர் உண்ணாவிரதம்

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தொடர்பில் வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்துமூலம் தருமாறு கோரி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் 8 பேர் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் நீரில் நச்சுப்பதார்த்தங்கள் இல்லையென்றால் அந்நீரை பொதுமக்கள் பருகலாமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது அவர்களது பிரதான...

திடீரென பூட்டப்பட்ட மாவட்டச் செயலகம்

தூய நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி, மாவட்டச் செயலகத்தை அண்மித்தபோது மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலின் கதவுகள் பூட்டு இடப்பட்டு பூட்டப்பட்டிருந்தன. தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், விதை குழுமம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் யாழ்.மாவட்டச் செயலாளருக்கு மகஜர் வழங்குவதற்காக பேரணியில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச்...
Ad Widget

கோட்டா அரசியலில் குதிக்க முஸ்தீபு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடலாம் என்பது தொடர்பாக விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த...

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : சிவாஜி காட்டம்

புதிய அரசானது ஆட்சி மாறிவிட்டது காட்சி மாறி விட்டது என்று வெளிநாடுகளுக்கு காட்டுகின்றது ஆனால் இங்கு காட்சி மாறவில்லை இது தான் உண்மை இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்றைய அமர்வில் தெரிவித்தார். உறுப்பினர் ரவிகரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தென் இலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்படவேண்டும் என்ற ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையில் இவ்வாறு...

கூட்டரசுக்கு விழுந்தது முதல் அடி

தேசிய அரசு உதயமாகிய பின்னர், நாடாளுமன்றில் நேற்று முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியலூடாக அரசு பெற்றுக்கொள்ளக் கூடிய கடன் தொகையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இவ்வாறு பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி...

குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் பணியில் நிபுணர்கள் அனைவரையும் கரம் கோர்க்குமாறு வேண்டுகிறோம்

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07.04.2015) வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பான...

வடமாகாண சபையில் புதிய உறுப்பினர்

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற போது, புதிய உறுப்பினர் சபைக்கு வருகை தந்தார். சுழற்சிமுறையில் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்ற...

 உப தவிசாளர் மீது தாக்குதல்

சாவகச்சேரி நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் சபையின் உபதவிசாளருமான குந்தன் யோகராஜாவை, திங்கட்கிழமை (06) இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி இயற்றாலை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பில் உபதவிசாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...

வடக்கில் வீட்டை நிர்மாணிக்காது ரூ.1470 இலட்சம் மோசடி

சுனாமிக்கு பின்னர் வடக்கில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம், ஒரு வீட்டைக்கூட நிர்மாணிக்காமல் 1,470 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணை குழு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். இந்த...

கைபேசி கட்டணத்துக்கு 25 வீத கழிவு

இன்று முதல் கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீத கட்டணக் குறைப்பு சலுகை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சகல உள்நாட்டு அழைப்புக்களுக்கும் இந்த கட்டணக் கழிவு நடைமுறைப்படுத்தப்படும். மைத்திரி அரசால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இந்த சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. எனினும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களின்...

மாகாண சபையில் கைபேசி பாவிக்க தடை

வடக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் அவைக்குள் மாகாணசபை உறுப்பினர்கள் கைபேசியை பாவிக்க முடியாது என அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண சபை அவைக்கு இருக்கவேண்டிய ஒழுங்கு விதிகளை கருத்திற் கொண்டே இதனை இன்றிலிருந்து நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தூய நீருக்காக திரண்டனர் மக்கள்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் இன்று காலை 10மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூய குடிநீருக்காக திரண்ட யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகள் வருமாறு, பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் நீர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கான கூட்டணி மாத்திரமே! – டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே கூறி வருகின்றனர். கூட்டமைப்பு பதிவு செய்வதில் தடைகள் இருப்பதாக அதன் தலைவர் கூறுகிறார். தடையாக இருப்பவர்கள் யார்? எனக் கேள்வி எழுப்பகின்றார் அதன் பேச்சாளர். இன்னொருவர் கனடாவில் சென்று கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஆதரவு தேடுகிறார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை...

யார் எதிர்கட்சித் தலைவர் என்பது இன்று தெரியவரும்

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இன்றையதினம் இது தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் நிமல் சிறிபால.டி.சில் வாவுக்கா, அல்லது...

கைவிடப்பட்ட காணியிலிருந்து சடலம் மீட்பு

சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியிலுள்ள கைவிடப்பட்ட காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் திங்கட்கிழமை (06) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். காணிக்குள் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

ஆட்சிமாற்றத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டவை நடைமுறையில் இல்லை

ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை, நடைமுறையில் காண முடியாதுள்ளது என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடியிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் - வடமாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று, முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு...

மூத்த அறிவிப்பாளர் கமிலினி செல்வராஜன் காலமானார்

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரும் ஒளி, ஒலிபரப்பாளரும் நாடக கலைஞருமான கமலினி செல்வராஜன் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். இவர், காலஞ்சென்ற கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார்.

உடையார்கட்டில் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்!

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு ஒன்றுக்குள் புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றுமன்தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர். இந்நிலையில்...

எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு அறிவிக்கப்படின் செயற்படுவோம்

எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை...
Loading posts...

All posts loaded

No more posts