- Saturday
- September 20th, 2025

உள்ளூராட்சிமன்ற மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் நேற்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினர். மூடிய அறைக்குள் இருவரும் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிகாவின் 70 ஆவது பிறந்தநாளாகும். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. இதன்போதே இருவரும்...

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பு நிகழ்வாக இந்து ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் நல்லூரில் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறும். மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் மாநாட்டின் நிறைவு நிகழ்வில்...

எமது மக்களைப் பார்த்து தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என...

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை...

தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியற் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சர்வதேச கூட்டுறவுதின நிகழ்ச்சி யாழ் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (04.07.2015) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதியான புரட்சியை பின்னோக்கி இழுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாத்தறை தொடகமவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தின் போது தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை-ஹம்பாந்தோட்டை பகுதிக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்துவிட்டு அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சுமார் முப்பத்தைந்து முதல் நாற்பது ஏக்கர் வரையான காணி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கீரிமலை மாவிட்டபுரம் வீதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட காணிகள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டு அவர்களின் வசம் இருந்து வந்தன. இன்று சனிக்கிழமை காலையில் கடற்படையினரால் குறிப்பிட்ட பிரதேசதத்தில்...

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின் சகோதரியின் கணவன் மற்றும் அவரது நண்பர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன்...

சுதுமலைப் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நபருக்கு 5 வருடங்கள் கடூழிய சிறைதண்டனையும் 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (03) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரான முதலாவது சந்தேகநபரின் சகோதரன் இந்த வழக்கில் இருந்து விடுதலை...

காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற 58 லட்சம் வாக்குகளில் 25 லட்சத்தையாவது பொதுத் தெர்தலில் பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும். இந்த முறை மஹிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சி...

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதும்இ அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஐனநாயக உரிமை! அதை மறுப்பதும்இ தடுப்பதும் அப்பட்டமான ஐனநாயக...

நிரந்தர அரசியல்தீர்வு நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு! – சுமந்திரன்
நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை நோக்கிய நகர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்றுமுன்தினம் குடத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 6 வருடங்களுக்கு முன்பு மே...

கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 23பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார். மேற்படி சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கொற்றாவத்தை...

விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்த மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் 50 பேரே தற்போது பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வருவதாக புனர்வாழ்வு அதிகாரி லெப்.கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் ஒன்றாக மேடையேறுவார்கள் என பங்காளிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

All posts loaded
No more posts