- Sunday
- July 27th, 2025

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதற்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இது அரசியல் கூட்டம் இல்லை எனவும் அபிவிருத்தி தொடர்பிலான அலுவலக கூட்டம் என்றும் கடும் தொனியில் கூறிய யாழ். அரச அதிபர் வேதநாயகன் அங்கு செய்தி...

வலி நிவாரணி மருந்துக்களை சிலர் போதைக்காக பயன்படுத்துவதனால் வலி நிவாரணி மருந்துக்களை கட்டுப்பாட்டுடன் வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் இளவயதினரே பெரும்பாலானவர்களாக...

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை, உடுவில் ஆகிய பகுதிகளில் பெண்களுடன் சேஷ்டை, வீதியில் கூடி நின்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 12 பேரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டு மற்றும் குழுமோதலில் ஈடுபடுபவர்கள், பொது சமாதானத்திற்குக் குழப்பம் விளைவிப்பவர்களைக் கைது செய்து பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை நிகழ்வு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. ஈழத்தில் வாழும் வயதில் மூத்த சிவாச்சார்யார்களாகிய இணுவில் காயத்திரி பீடத்தினுடைய முதல்வரும் தர்மசாஸ்தா குருகுல அதிபருமாகிய சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள், சரசாலை நுணுவில் சிதம்பர விநாயகர் ஆலய மூத்த குருக்கள்...

வடக்கில் இடம்பெற்ற போரால் விதவைகளான பெண்கள் தொழில் தேடும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதுடன் அதற்கு இசையவும் வைக்கப்படுகின்றனர் என 'ஏ.எவ்.பி.' செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான பெண்களை மூலங்களாகக் கொண்டு ஏ.எவ்.பி. வெளியிட்டுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து...

யாழ்.குடாநாட்டில் குடிநீரில் கலந்துள்ள கழிவு ஒயில் மற்றும் மாசடைதலை கண்டுபிடிப்பதற்கான கருவி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ சங்கத்தினர் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற ஊடகவியர்கள் உடனான சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, உயிரியல் மண்வடிகட்டி என்ற...

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒவ்வொரு நாளும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒவ்வொருவர் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் தெரிவித்துள்ளார். அதிகரித்த போதை வஸ்துப் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில்...

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத்...

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக வேண்டுமாயின் அவர் தேர்தலில் போட்டியிடட்டும். இருப்பினும், அவரை இம்முறை வெற்றியடையச் செய்ய புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லை. அதனால், இம்முறை அவர் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாவலப்பிட்டிய, அத்கால பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன்கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார். முன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்....

“மனிதம் பேணுவோம், பண்பாடு காப்போம்” எனும் தொனிப்பொருளில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் நினைவுடனான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. சுமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து, ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத...

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சோதனையின்போது, இராணுவச் சீருடை ஒன்று, ஆயுத உறை ஒன்று,...

யாழ்.குடாநாட்டில் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு இதுவரை 100ற்கு மேற்பட்டவர்கள் உள்ளாகியுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த வைரஸ் தொற்று இருந்த போதும் கடந்த சில வாரங்களாகவே குறித்த வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மன்னார் மாவட்டத்தைச்...

யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ரவிராஜ் அவர்களுக்கு அவரது ஆதரவாளர்களால் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன்படி இன்றைய தினம் சாவகச்சேரியில் 7 அடி உயரமுடைய சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கலந்து கொண்டு சிலைக்கான அடிக்கல்லினை நாட்டி...

வடமாகாணசபையின் கோரிக்கையை நிறைவேற்ற மதுவரித் திணைக்கள ஆணையாளர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 09ஆம் திகதி வடமாகாண எல்லைக்குள் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகளை மூடவேண்டும் எனவும் ஆலயங்கள், பாடசாலைகள், பொதுநிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு அருகாமையில் இயங்கும் மதுபான நிலையங்களுக்கான அனுமதியை...

மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மிருக பலியிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே கலந்துகொண்ட ஆலயங்களில் 90 வீதமானவை...

கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைக் கவசத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்திய 12 பேருக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கபட்டது. சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட பரிசோதனையின் போது கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைகவசத்துடன் அணிந்து பயணித்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்குகள் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை...

பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கமுடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே பரீட்சை தினங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. எனினும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம்...

இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் பசுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார். "அறிவுப் பொருளாதாரத்தில் சக்தி சவால்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி...

All posts loaded
No more posts