Ad Widget

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) சட்டநாதர் வீதியிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் சமகால தேர்தல் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts