பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள்...

ஐ.நா ஆவணம் கசிவு – பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? சனல் 4 கேள்வி!

ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில்...
Ad Widget

முருகன், சாந்தன், பேரறிவாளன் தண்டனை ரத்து சரியான தீர்ப்பே!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனை ரத்துச் செய்தும், அவர்களுக்கான தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், உச்சநீதிமன்ற தலைமை...

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி ஆய்வரங்கு

வடமாகாண கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி தொடர்பான ஆய்வரங்கு செவ்வாய்க்கிழமை (28.07.2015) யாழ் நகரில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சு கடந்த 22 ஆம் திகதி தொடங்கி 28 ஆம் திகதி வரையான பனை அபிவிருத்தி வாரத்தில் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே,...

மக்களின் சுய நிர்ணய அங்கீகாரம் பெறுவதன் மூலம் மட்டுமே தியாகங்களிற்கு பெறுமதி கிடைக்கும் – செல்வராசா கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஜூனியன்குளம் அக்கராயனில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சியை பிரதிநிதிப்படுதும் இலக்கம் 9 இல் பேட்டியிடும் முன்னை நாள் போராளியும்...

இறுதி யுத்தகாலத்தில் திட்டமிட்டே கூட்டமைப்பினர் இந்தியா சென்றனர்!-கிசோர்

இறுதி யுத்தம் நடைபெற்ற போது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் திட்டமிட்டே இந்தியா சென்றிருந்ததாகவும் அதனை தடுக்கும்படி புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார் என கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் இறுதி யுத்தம் நடைபெற்ற போது கூட்டமைப்பின்...

கோகிலவாணிக்கு சிவாஜிலிங்கம் ஆதரவு!ஓங்கி குரல் ஒலிக்க ஆதரிக்க கோரிக்கை!!

கட்சி எல்லைகளிற்கப்பால் பெண்போராளியென்ற வகையிலும் தனது இரண்டு சகோதரர்களையும் மாவீரர்களாக மண்ணிற்கு கொடுத்த சகோதரியென்ற வகையிலும் கோகிலவாணிக்கு தனது ஆதரவையும் வரவேற்பினையும் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரான அனந்தியால் ஜெனீவர் வரை சென்று உரையாற்ற முடிந்ததோ அதே போன்று கோகுலவாணியாலும் முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய...

யாழ். மாவட்டச் செயலகத்தினால் செய்தி மடல் வெளியீடு!

யாழ்.மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை தாங்கிய செய்தி மடல் இன்று புதன்கிழமை நண்பகல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் சம்பந்தமான தகவல்களை...

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்ந்தும் நெருக்கடி!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதவாளர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களது நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார். அவர்களது குழு சந்திப்புக்களினை அவதானிக்க வந்திருந்த பிரதிநிதிகளிடமே இக்குற்றச்சாட்டை கஜேந்திரன் முன்வைத்துள்ளார். இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவித்...

தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் -டர்ஷன்

தோல்விகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இளைஞர்களை கனவு காண சொல்லிவிட்டு கண் மூடி விட்டார் எங்கள் அப்துல் கலாம் என தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். . அது மட்டுமல்ல நீங்கள் உங்கள் எதிர் காலத்தை மாற்ற முடியாது என்றும் ஆனால் பழக்க வழக்கங்களை மாற்ற முடியும் என்பதோடு...

வேட்பாளர் பட்டியலில் இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாது! தேர்தல் ஆணையாளர் அதிரடி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதவர்களோ, தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் அந்தந்த கட்சிகளினால் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களைத் தவிர்ந்த வேறு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப் பட்டியல் ஊடாக பதவி வகிக்க இம்முறை அனுமதிக்கப்படாது. தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விடயம்...

45 இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

அகதிகளாக இந்தியாவில் பல பகுதிகளிலும் உள்ள முகாம்களில் குடியேறியிருந்த இலங்கையர்கள் 45 பேர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) சர்வதேச விமான நிலையத்தனூடாக இலங்கையை வந்தடைந்தனர். இதன் பிரகாரம் திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 45 பேரும் முகாம்களின்...

மக்களிற்காக ஒரு சிறுதுரும்பையும் எடுத்து போட்டிருக்காதவர்களே இந்த இணைய போராளிகள்- அனந்தி

போதுமான அரசியல் முதிர்ச்சியற்றவர்களே தன் மீது இணையத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். போதுமான அரசியல் முதிர்ச்சியற்ற, எதையும் ஆராய்ந்து பார்க்க தெரியாத சிறுகுழுவொன்று இணையத்தளத்தில் உலாவிவருவதாகவும், அவர்கள் தமது சொந்த நலனினடிப்படையில் அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்தது,...

யாழில் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தம்­பி­ரா­ஜாவின் மகன் கைது

யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்­லரின் ஆலோ­ச­னைக்கு அமைய யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த விஷேட...

யாழ்.விருது-2015 பேராசிரியர் தேவராஜாவுக்கு யாழ்.மாநகர ஆணையாளர் அறிவிப்பு

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடந்தோறும் வழங்கும் யாழ்.விருது இம்முறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் க.தேவராஜா அவர்களுக்கு வழங்கப்படுவதாக யாழ்.மாநகரசபையின் ஆணையாளரும், சைவசமய விவகாரக் குழுவின் தலைவருமான செ.பிரணவநாதன் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவின் மகாசபை நேற்றையதினம் ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் யாழ். மாநகர சபை மண்டபத்தில் கூடியபோது,2015ஆம்...

யாழ் பல்கலையில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நேற்று (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலை கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை பல்கலைகழக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலை கழக மாணவர்கள் கலந்துகொண்டு மறைந்த பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவரின்...

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள சகல பிரேதச செயலக பிரிவுகளினூடாகவும் மக்களினால் முன்மொழியப்பட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில்...

காணாமற்போனோருக்கான விசேட செயலகம்

காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக தனது கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட செயலகம் ஒன்றை நிறுவவுள்ளதாகவும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தச் செயலகத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை (28), யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்....

 ரணிலுக்காக மஹிந்த பாடிய பாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில்...

இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தனவுக்கே அமைச்சர் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்படி இபோச பஸ்களில் வேட்பாளர்களின்...
Loading posts...

All posts loaded

No more posts