இன்று பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்! – யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.

பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

தலைக்கவசம் இன்றி மோட்டார் வாகனம் செலுத்தினால் அதியுச்ச தண்டனை : யாழ்.போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி

தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...
Ad Widget

கஞ்சா நுகர்ந்த பூசகர் கைது

சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...

முன்னாள் போராளிகளுக்கு இடமில்லை என புலிப் போர்வையாளிகள் தெரிவிக்கின்றனர் – டக்ளஸ்

புலிப் போராளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்க இயலாது என புலிப் போர்வையாளிகள் கூறியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "புலிகள்...

மனைவியை கொலை செய்தவருக்கு மரணதண்டனை

சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, நேற்று வியாழக்கிழமை (09) தீர்ப்பளித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில்...

அனந்தி சசிதரன் சுயேச்சையாக தேர்தலில் குதிக்கிறார்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக  தெரிவித்துள்ளார்   மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும்,...

திருகோணமலையில் மனிதப்புதைகுழி!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...

சுசில்,விமல், வாசு, பந்துல, டளஸ் உள்ளிட்ட பலருக்கு வேட்பு மனு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில்...

யாழ் மாவட்ட த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது !

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்பாறையில் அவர்கள் முதலாவதாக் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள த.தே.ம.முன்னணியின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்தரன் , பத்மினி...

போதைப் பொருள் வர்த்தக அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அதிலிருந்த முற்றாக விடுபட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைபொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கெதிராக கட்சி பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். "போதைப் பொருள் அற்ற நாடு" என்ற தொனிப்பொருளில் ஜாஎல நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடரும் பொய்வாக்குறுதிகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும், காணாமற் போனவர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுப்பதாகக் கூறியிருப்பது எதிர்வரும் தேர்தலிலும் எமது மக்களை ஏமாற்றும் இன்னொரு செயற்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ், அரசியல்...

இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்

இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில்...

யாழில் மற்றுமொரு பல்கலை மாணவி உயிரிழப்பு.!!

தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி இவ்வாறு உயிரிழந்தவராவார். இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர்...

முன்னாள் போராளிகள் அமைப்பு தங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. அவர்களின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஓர் இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுமாகும். ஏன் இன்றும் த.தே.கூட்டமைப்பில்...

தேர்தல் அறிவிப்பின் பின்னர் வழங்கப்படும் அரச நியமனங்கள்!

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச நிறுவனங்களினூடாக தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களில் அதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றர். பதவி உயர்வு, புதிய நியமனங்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள்...

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த : குருநாகலில் போட்டி!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

நவாலிப் படுகொலையின் நினைவு நாள் இன்று

கணப்பொழுதில் 147 உயிர்களை காவுகொண்ட நவாலி படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 1995ஆம் ஆண்டு இதே நாளில், பலாலி ராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தினரால், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது, விமானப்படையினரும் அதற்கு ஒத்தாசையாக குண்டுகளை கணக்கின்றி வீசினர். மக்கள் அல்லோக கல்லோலப்பட்டு தமது...

யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டுவிழா இலட்சனை வெளியீடு

இலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையாக விளங்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலட்சனை வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை (06) கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. இலட்சனை வெளியீட்டு நிகழ்வில் யாழ். மெதடிஸ்மிஷன் திருச்சபை தேவாலய குருமுதல்வர் வண. ரவிசங்கர் நைல்ஸ் அடிகளார் கலந்துகொண்டு இலட்சனையை திரைநீக்கம்...

அமைச்சரவையில் கூட்டமைப்பு சேராது

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறந்த வெற்றியைப் பெற்றாலும் அமைச்சரவையில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மாவை, அங்கு மேலும் கூறுகையில், 'தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பலத்தை...

லண்டனில் பந்து தாக்கி உயிரிழந்த இளைஞனின் பூதவுடலை யாழ்ப்பாணம் எடுத்துவர நடவடிக்கை!

கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். லண்டன் சர்ரே பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts