Ad Widget

யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

அதேநேரம், வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக இடம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம் மக்கள் அமைப்பின் தலைவரும், யாழ்ப்பாணம் பிரதான பள்ளிவாசல் சபையின் தலைவருமாகிய சுல்தான் அப்துல் காதர் முபீன் கூறுகின்றார்.

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் தமிழ் மக்கள் ஆகிய சிறுபான்மை இன மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக வாக்களித்ததையடுத்து உருவாகியுள்ள ஆட்சி மாற்றத்தின் அடியொட்டியே ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் ஒன்று நமைடபெறவுள்ளது.

எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணத்வருவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் ஏற்கனவே ,ஏற்பட்டஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியிருப்பதாகவும் அப்துல் காதர் முபீன் குறிப்பிடுகின்றார்.

அதேநேரம் முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் பொதுத்தேர்தல் வேடபாளர் பட்டியலில் இடமளிக்காதிருப்பதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இம்முறை ஐக்கிய தேசிய கட்சி தனது வேட்பு மனுவில் முஸ்லிம் மக்கள் சார்பில் பிரதிநிதி ஒருவருக்கு இடமளித்திருக்கின்றது. தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் திருப்தியளிக்காத வகையில் அமைந்திருப்பதனால், பொதுத் தேர்தலின் பின்னர், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு கையாள்வார்கள் என்பதிலும் அவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கின்றது.

இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு அபிவிருத்தி என்பவற்றிற்கு, தேசிய கட்சியொன்றின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை அடியொட்டி தாங்கள் செயற்படுவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அப்துல் காதர் முபீன் தெரிவித்தார்.

Related Posts