Ad Widget

இராணுவ சூழல் இல்லாதொழிந்து புது வசந்தம் மலரட்டும்

இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் என பிரார்த்திப்போம். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய "மலரட்டும் புதுவசந்தம்' என்னும் புத்தாண்டு...

தலைக்கு மருத்துநீர் பூசும் தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைக்கு மருத்துநீர் பூசும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி 9.06 மணிக்கு பிறக்கு சுபநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கதுருவெல ஜயந்தி விகாரையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவ திணைக்களத்தினால் வடமத்திய மாகாண கதுருவெல விகாராதிபதி கதுருவெல தம்மபால தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் யானைகளுக்கும் தலைக்கெண்ணெய் பூசும் நிகழ்வு...
Ad Widget

மன்மதன் புதுவருட சுப நேரங்கள்!

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14-04-2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணிதப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47...

30 வருடங்களின் பின் யாழ் பல்கலைகழகத்தில் இஸ்லாமிய சஞ்சிகை வெளியீடு

முப்பது வருடங்களின் பின்னர் யாழ் பல்கலை கழகம் இன்கிலாப் இஸ்லாமிய சஞ்சிகையை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சஞ்சிகையை வெளியிட்டார். இந்நிகழ்வில் விவசாய பீட...

தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே மோதல்: அண்ணன் அடித்துக் கொலை!

புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பரிந்து கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த துரதிஸ்டவசமான செய்தி முல்லைத்தீவு - முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரர் (19 வயது) கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய இளைய சகோதரர்...

வடக்கின் கொள்ளைக் குழு ஒன்று மன்னாரில் கைது! பல லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களும் மீட்பு

வடபகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணெருவர் உட்பட நான்குபேரை தாம் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்துள்ளனர் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இந்த குழுவிடமிருந்து நகைகள், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் உட்பட 24 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களையும் தாம் கைப்பற்றினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த...

வீமன்காமம் வடக்கில் இராணுவ பயிற்சி முகாம்

வீமன்காமன் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டுள்ளமையை அங்குள்ள பயிற்சி உபகரணங்கள் மூலம் அறியமுடிகின்றது. கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 613 ஏக்கர் காணிகளை மக்கள் பார்வையிடுவதற்கு சனிக்கிழமை (11) அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீமன்காமம் வடக்குப் பகுதியில் இராணுவ பயிற்சி முகாம்...

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவர்கள் கைது

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (11) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 3 சந்கேதநபர்கள் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர். வீதியில் நடமாடித் திரிந்த இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, முரணான கருத்துக்களை தெரிவித்ததுடன், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பல வருடங்களின் பின் முதன் முறையாக வாழ்க்கைச் செலவு குறைவு

சுமார் ஆறு வருடங்களின் பின் முதல் முறையாக கடந்த மார்ச் மாதமே இலங்கையில் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல வருடங்களின் பின்னர் மக்கள் சிரமம் இன்றி புதுவருடத்தை கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அல்பிடிய நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

85 வீத கிணறுகளில் ஒயில் மாசு இல்லையாம்! – அரச அதிபர்

சுன்னாகம் பிரதேசத்துக் கிணறுகளில் 85 சதவீதமானவற்றில் கழிவு ஒயில் மாசு இல்லை என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன் அவர்களினால் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல்...

மஹிந்த போட்டியிடுவதற்கு தடையில்லை – மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீர் பிரச்சினை; விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதிமறுப்பு

வலிகாம நீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கூட்டத்தில் ஊடகவியளாலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ள வலிகாம நீர் பிரச்சினை தொடர்பில் ஆராயும் பொருட்டு விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது. மேற்படி கூட்டத்தில் வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய அமைச்சர் மற்றும் வலிகாம பிரதேசசபைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து...

துன்னாலையில் குழு மோதல் : நால்வர் வைத்தியசாலையில்

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, துன்னாலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (10) இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் சனிக்கிழமை (11) தெரிவித்தனர். துன்னாலை கலகை கந்தன் ஆலயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, துன்னாலை தக்குச்சம்பாட்டி மற்றும் கலிகை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட...

2ம் கட்டமாக விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டனர் மக்கள்

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே - 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே - 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம்...

20 ஆம் திருத்தத்தை ஆராய ஐவர் கொண்ட குழு நியமனம்

தேர்தல் முறைமை மாற்றத்தை 20ஆவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருவதற்காக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து எம்.பிக்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்திரிபால...

மனித உரிமை ஆணைக்குழுவில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கும் நோக்கில் இனந்தெரியாத மர்ம நபர்கள் துரத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் மேற்படி ஊடகவியலாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் தூய நீருக்கான உறுதிமொழியை வேண்டி உண்ணாவிரதம் இருந்தவர்களை, வட...

சுகாதார மருத்துவ நிலையம் திறப்பு

இந்தியன் ஒயில் நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி வீதி, மடத்தடியில் அமைந்துள்ள யூ.பி.லி சுகாதார மருத்துவ நிலையம் வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஆனையாளர் எஸ்.பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிலையத்தை திறந்து வைத்தார். யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலேட்...

590 ஏக்கர் காணிகள் விடுப்பு

யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள்...

சுன்னாகத்தின் நீரைப் பருகாதீர்கள்! 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய்!! ஆய்வில் உறுதியானது என்கிறார் ஹக்கீம்!!!

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 73 வீதமானவற்றில் கழிவு எண்ணெயும், கிறீஸும் கலந்துள்ளமையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அப்பகுதி நீரைப் பருக வேண்டாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார். சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என்று...

எதிர்கட்சித் தலைவர் பதவி பெறும் தகுதி இலங்கை தமிழரசுக் கட்சிக்கே உண்டு!

தேர்தல் சட்டம் மற்றும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசு கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை தமிழரசு கட்சி தமது வாதத்தை முன்வைத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
Loading posts...

All posts loaded

No more posts