Ad Widget

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் “கதம்ப மாலை”

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியை மட்டும் ஒரே நோக்கமாக கொண்டு இயங்குகின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலை ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒன்றிணைவில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வருடம் சித்திரை 5ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடாத்திய ‘கீத நிருத்திய சிருங்கார்’ இசை நாட்டிய நிகழ்ச்சி இந்துக்கல்லூரியின் பெருமையை தலைநகரில் பறைசாற்றும் விதமாகவும் அரங்கு நிறைந்த நிகழ்வாக வெகு விமர்சையாக நடைபெற்றது.

இசையும் நாட்டியமும் சங்கமித்த இந்நிகழ்வு கலை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் மத்தியில் வெற்றிபெற்றமையை தொடர்ந்து , தலைநகரில் மீண்டும் கல்லூரியின் பெருமையையும் கல்லூரியின் 125 வது நிறைவுக்கொண்டாட்டத்தின் இன்னுமொரு நிகழ்வாகவும் “கதம்ப மாலை” (பல்சுவை நிகழ்ச்சி) இனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மாலை 5.30 வெகு சிறப்பாக நடாத்தவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் “கதம்ப மாலை” விழாவில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு ஐ.தயானந்தராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். மாலை 5.30 மணி தொடக்கம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நிகழ்வுகளாக ஶ்ரீமதி திவ்ஜா சுஜேனின் அபிநயக்ஷேத்திரா நடன பள்ளி மாணவிகளின் “நிருத்யானந்தம்” நடனமும் ,

“இன்றைய இளைஞர்கள் பெற்றதே அதிகம்!! இழந்ததே அதிகம்!!”

எனும் தலைப்பில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும், முன்னாள் ஆசிரியரும், வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவருமான தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில், சிறப்பு பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டிமன்றமும், மொறட்டுவ, கொழும்பு, பேராதனை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலை கழக மாணவர்கள் இணைந்து வழங்கும் பல்கலை “இசை மாலை” நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

குறைந்து செல்லும் கலை இலக்கிய ஆர்வம், நிகழ்வுகளையும் மீண்டும் துலங்க வைத்து, தலை நகரில், கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்தி எமது கல்லூரியின் பெருமையையினையும் எடுத்துச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தரமான நிகழ்வுகளால் நிறையவுள்ள, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கதினருடைய “கதம்ப மாலை” நிகழ்வில், கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்து, பயன் பெறுமாறு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

“தலை நிமிர் கழகமும் இதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே ”

image1

Related Posts