அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருகை தருவது தொடர்பில் புதிய ஆட்சிபீடத்தை எற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என வடமாகாண மீனவ சம்மேளன அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண மீனவ சம்மேளன அமையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட மீனவ கடற்றொழில் அமைப்புகளின் தலைவர்களுடான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ் நீரியல் வளத்...

எதிர்க்கட்சித் தலவர் பதவியை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதிக் குழுக்களின் தலைவர் பதவிகளை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். மாறாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை சர்வதேச கண்களுக்கு காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை பாதுகாக்கும்...
Ad Widget

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை தரவேண்டும் தேசிய அரசு! – சுமந்திரன்

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரிவித்துள்ளார். அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அர­சாங்கம் தொடர்பில் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். கடந்த காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய இப்­போதும் ஒரு கூட்டு அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது....

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு தாக்குதல்கள்!!!

இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான...

உதவிய மாணவியின் மீது ஆசிரியர் தாக்குதல்

புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக...

அமைச்சரவை பதவியேற்பில் சில சுவாரசியங்கள்…

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்... வருகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர்....

தெல்லிப்பழைப் பொலிஸார் சிரமதானம்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த தலைமையில் இடம்பெயர்ந்து தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூயின் ஆரம்பப் பிரிவுப் பாடசாலை அமைந்துள்ள வளாகப் பகுதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் காங்கேசன்துறை...

மாற்றம் வரவேண்டுமானால் சர்வதேச பொறிமுறையுடனான விசாரணை அவசியம்!

இந்த நாட்டில் ஒரு மாற்றம் வரவேண்டுமாக இருந்தால் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை அவசியம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையின் கட்டடத்தை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்....

இனி அரச நிறுவனங்களுக்கு தலைவர், பணிப்பாளர்கள் அவரவர் இஸ்டத்திற்கு நியமிக்க முடியாது!

அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம்,...

நாட்டில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் பின்னர்,...

மக்கள் ஆர்வமாக வரலாற்றுக்கடமையில்! கையெழுத்து போராட்டத்தில்…

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்கிறது கையெழுத்து வேட்டை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...

பதில் எதிர்க்கட்சி தலைவராக மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின்  அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார்.  இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...

வடமாகாணத்தில் சிறிய, நடுத்தர தொழிற்றுறை முயற்சிகள் கூடுதல் நன்மை பயக்கும்! – முதலமைச்சர்

கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (04.09.2015) இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வடமாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு, தலைவரவர்களே, விசேட அதிதி அவர்களே, மாகாண உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, இவ்வருடத்தைய மாகாண கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். எமது தொழில்த்துறைத்...

நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை அவசியம் – பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டுக்கு மாற்றம் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். அதனை...

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரம் இதோ!

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம...

நல்லூர் குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து கோபுரத்தில் உள்ள நவ கலசத்திற்கும் அபிஷேகம் செய்ய நவ கும்பங்கள் சிவாச்சாரியார்களின் மந்திர ஓதல்களுடனும் மங்கள வாத்தியங்களுடனும் கும்பங்கள் வெளி வீதி...

சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து!

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:, கடந்தமாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன்...

சென்னை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை!!

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து...

யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு காசநோயின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட காசநோய் கட்டப்பாட்டு அதிகாரி ஆர். மாணிக்கவாசகன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் காசநோயின் தாக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது. அதேவேளை ஒன்று தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடத்தில் காசநோயின் தாக்கம்...
Loading posts...

All posts loaded

No more posts