ரயில் முன் பாய்ந்து மூவர் தற்கொலை

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு பெண் மற்றும் 01 வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் இவர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்...

காணாமல்போன கிளிநொச்சி சிறுமி; அலைபேசி பதிவுகள் ஆராய்வு

கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி தொடர்பான விசாரணையை மேற்வதற்காக சந்தேகப்படும்படியான அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை அலைபேசி நிறுவனத்தின் ஊடாக ஆராய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (13) அனுமதி வழங்கினார். சிறுமி கடத்தப்பட்டு பணத்துக்காக...
Ad Widget

பஸ் மோதி 5 மாடுகள் பலி: 3 மாடுகள் காயம் : சாரதி கைது

பஸ் மோதியதில் 5 மாடுகள் பலியாகியுள்ளதுடன் 3 மாடுகள் படுகாயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (13) மாலை யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சந்தியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸே, பாதையை கடக்க முயன்ற மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார்...

இளம் குடும்பஸ்தரை நான்கு நாட்களாகக் காணவில்லை என முறைப்பாடு!

கைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுச் சென்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (வயது 34) என்பவரே இவ்வாறு காணாமல் போனவராவார். கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை கடையில்...

கொழும்பில் சங்­கரி தலை­மை­யி­லான பட்­டி­யலில் ஜன­நா­யக கட்சி உறுப்­பினர் ஹிந்­தல்­பிட்­டிய

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை வர் வீ.ஆனந்­த­சங்­கரி தலை­மையில் கொழு ம்பு மாவட்­டத்தில் கள­மி­றங்­கி­யுள்ள வேட்­பாளர் பட்­டி­யலில் ஜன­நா­யகக் கட்­சியின் மேல்­மா­காண சபை உறுப்­பினர் சுசில் ஹிந்­தல்­பிட்­டி­யவும் இடம்­பி­டித்­துள்ளார். இந்தப் பட்­டி­யலில் கூட்­ட­ணியின் நிர்­வாகச் செய­லாளர் இரா.சங்­கையா, நாகேந்­திரன் தர்ஷன் ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர். கூட்­ட­ணியின் பட்­டி­யலில் உள்ள ஏனைய வேட்­பா­ளர்­களின் விபரம் வரு­மாறு வீர­சிங்கம் ஆனந்­த­சங்­கரி,...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது விநாயகமூர்த்தி கடும் அதிருப்தி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை அதனால் தனது சார்பாக இன்னும் ஒரு  சட்டத்தரணிக்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு தமிழ் தேசிய...

தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரம்: யாழ் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாயபீட மாணவனொருவன் அரிய கண்டுபிடிப்பொன்றை கண்டுபிடித்துள்ளார். தானியங்கி முட்டை பொரிக்கும் இயந்திரமொன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். விவசாயபீடத்தின் இறுதியாண்டு விவசாய இயந்திரவியல்துறை மாணவனான வாகீசன் டிவாகர் இதனை கண்டுபிடித்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர். இதுவரை பாவனையில் உள்ள தானியங்கி முட்டைபொரிக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் விட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாகவும், அதிக வசதிகளை கொண்டதாகவும்,...

தொலைபேசியில் வந்த செய்தியால் பதறிப்போய் தேர்தல் மேடையில் இருந்து இறங்கி ஓடிய மஹிந்த!

கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாத தோரணையில் கம்பீரமாக தனது பிரதிமையை காண்பித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ராஜபக்‌ஷ தேர்தல் மேடையில் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. பிலியந்தலவில் கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் கைத்தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ஐக்கிய மக்கள்...

கருணா அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா?

பாராளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் "கருணா" என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை. கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

தமிழரசு கட்சியின் அநீதியும் அனந்தி சசிதரனின் நேர்மையும்!

தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க் கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்...

சுமந்திரனின் அழைப்பு தொடர்பில் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருடன் ஈபிடிபி தர்க்கம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்குள் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் சுமந்திரன் தொலைபேசியில் உரையாடியமை ஊடாக தேர்தல் திணைக்களத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாகவும், முறைகேடுகள் நடைபெறும் எனவும் ஈ.பி.டி.பி சுமத்திய குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கும் நேரத்தில், தேர்தல் திணைக்களத்திலிருந்து...

கறைபடியாத கைகளுடன் நாம் தேர்தல் களத்தில் : அங்கயன்

கறைபடியாத கைகளுடன் நாங்கள் இளம் கல்விமான்களுடன் களத்தில் இறங்கியுள்ளோம்.என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். அனைவரும்  மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது.ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களை போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச்...

வேட்பு மனு பரிசீலனை வேளையில் குழப்பம்! தேர்தல் ஆணையாளர் சுமந்திரனுக்கு நேரடி தொலைபேசி அழைப்பு ! இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை வெட்டி எழுதிய செயலாளர்!

இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது.  இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை...

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை; கொழும்பு நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு

வித்தியாவின் வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்று நாடாளுமன்றத் தேர்தல்களின் வேட்பு மனுத் தாக்கல் செய்வதன் இறுதிநாள் என்றமையால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளுக்கு அதிகளவான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே சந்தேக நபர்களை...

தமிழர் இனப்பிரச்சனையில் ஏற்கப்பட்ட திம்புக்கோட்பாடு இன்று 30 வருட நிறைவை காண்கிறது

1980 களில் நிலவிய‌ பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய்...

வேட்புமனு வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி உட்பட பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான பலருக்கு வேட்மனு வழங்கவேண்டியேற்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை இன்று ஆற்றவுள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் அமைப்பு வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு, யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் சுயேட்சைக் குழுவாக இன்று திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா,...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல்! பட்டியல் வெளியாகியது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் காங்கிரசின்  சைக்கிள் சின்னத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வேட்புமனு தாக்கல் செய்கிறது,நேற்றிரவு முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்புமனுவில் கைச்சாத்திடார் யாழ்ப்பாணப்பட்டியல் வருமாறு (1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பு மனுவில் கஜேந்திரகுமார் கையெழுத்திட்டார்

இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பு மனுவில் நேற்றிரவு கஜேந்திரகுமார் கையெழுத்திட்டார்

வித்தியா கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையின் போது சுவிஸ் ஆசாமி பொலிஸ்பிடியிலிருந்து தப்பித்து எப்படி வெள்ளவத்தை சென்றார் என்பது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொருவன், சம்பவதினம் தான் கொழும்பில் இருந்ததாக கூறிய விடயம் தொடர்பான விசாரணை...
Loading posts...

All posts loaded

No more posts