Ad Widget

பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியின் வாகனம் விபத்து

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது வாகனம் மாரவில - கோடவேல சந்தியில் வைத்து வேன் ஒன்றுடன் மோதியதில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாரவில் பொலிஸின் மோட்டார் வாகனப் பிரிவினர்...

மாலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை?

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (16) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கேசன்துறை பொத்துவில் ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில்...
Ad Widget

படையினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு சட்ட விலக்களிப்பு நீடிக்கிறது – ஐ.நா. செயலாளர்

இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. - இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். முரண்பாடுகள் தொடர்பான பாலியல்...

இ.போ.ச. பஸ் – பிக்கப் விபத்தில் இருவர் பலி! இருவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26),...

நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம்

நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் ,மற்றும் தொழில் ஆணையாளர் கனகேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் நாம் முக்கியமாக நடைபாதை...

தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க விடோம்! பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் சம அந்தஸ்து அவசியம்!!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். கொழும்பில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு...

வலி.வடக்கில் எஞ்சியவற்றை களவாடும் திருட்டுக் ‘கோஷ்டி’!

வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில்...

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில்

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து...

அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் : இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ்

இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இந்திய அரசால்...

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்....

அனலைதீவு-யாழ்ப்பாணம்- ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம்

இன்று (15) வடக்கின் அனலைதீவு-யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை (15) சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிலவேளைகளில் கடுங்காற்றுடன் கூடிய இடி மின்னல் ஏற்படக்கூடிய...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றியத்தினால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஜே.கே நிறுவனமும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் இணைந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கலந்துரையாடலின்...

தனது காணியை இராணுவம் விடுவிக்கவேண்டும், பரந்தனில் பெண் உண்ணாவிரதம்!

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

இந்தியா செல்லும் இலங்கைப் பயணிகளுக்கு இந்தியாவில் விசா

இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது...

யாழில் 90% உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் இல்லை!

யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான...

வீதீகளில் அமைப்பதில் புதிய அரசு மோசடி! – நாமல்

திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான விதிகளையே புதிய அரசாங்கம் அமைத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதை நிர்மாணப் பணிகளுக் காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,...

உள்நாட்டு விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கையில்லை: ஐ.நா.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும்...

குடிநீர் விடயத்தில் மக்களை ஏமாற்றுகிறது கூட்டமைப்பு: டக்ளஸ்

சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும்...

பேஸ்புக் குறித்து 3 மாதங்களில் 500 முறைப்பாடு!

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை...

இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளி இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ்வோம்

புதியதொரு அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளிவிட்டு இலங்கை சமூகம் என்ற உணர்வுடன் வருங்காலத்தை எதிர்பார்த்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளில் இருந்து மீண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையானது மிக முக்கியமான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts