இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்த கரிசனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான சாதகமான சில...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை – கஜேந்திரகுமார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து...
Ad Widget

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் இலக்கங்கள் வெளியாகின

தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்  யாழ்ப்பாண மாட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வெளியாகிஉள்ளன. வாக்காளர்கள் சைக்கிள் சின்னத்தின் முன்னாலும் பின்னர் விரு்ம்பிய 2 வேட்பாளர்கள் முன்னாலும் வாக்களிக்க முடியும் (1) விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்) (2) சி.ஆனந்தி  (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன்...

அரசியல் சாக்கடையாயின் அதனை சுத்தப்படுத்தும் தொழிலாளியாக விரும்புகின்றேன் – த.வி.கூட்டணி தர்சன்!

இன்று கொழும்புமாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் தலைமையில்  போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.அதில் கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு மாவட்ட  வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் மேற்கண்டவாறு கருத்து  தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள மூவின மக்களையும் ஒருங்கிணைத்து யாதி பேதங்களையும் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் மறந்து தமிழர் விடுதலைக்கூட்டணி ஜனநாயக கட்சியோடு...

தேர்தல் கருத்துக்கணிப்பில் சைக்கிள் அணி முன்னணியில்! மக்கள் மாற்றத்திற்கு தயார்!

நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்றத்தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் முன் முக்கிய போட்டித்தெரிவுகளாக வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இருக்கின்றன. வழமைபோல இணையத்தளங்கள் தேர்தல் கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இன்று ஒவ்வொருவரும் எதோ ஒரு வகையில் இணையத்துடன் இணைந்துள்ள நிலையில் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களின் கருத்துக்கள்  வாக்காளர்களிள் எண்ணங்களை பிரதிபலிப்பவையாக...

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியீடு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கும் அவர்களுக்கான இலக்கங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் வருமாறு, அருந்தவபாலன் கந்தையா- 01 , ஆனந்தராஜ் நடராஜா-02, ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணம்-03, ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்-04, ஈஸ்வரபாதம் சரவணபவன்-05,...

பண்ணாகம் கொலை வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படாததால் சந்தேகநபர் விடுதலை!

பண்ணாகம் அழகரட்ணம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நிறைவு பெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம்...

புலம்பெயர்ந்த, உயிரிழந்த வாக்காளர் விவரம் திரட்டல்

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, உயிரிழந்துள்ள வாக்காளர்களின் விவரங்கள் கிராம சேவையாளர் ஊடாக தேர்தல்கள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தகவல்கள் திரட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலின்போது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளது....

வடமாகாண மாற்றுதிறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டை

வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால்...

தெல்லிப்பளை ஓ.ஐ.சி பணியிலிருந்து இடைநிறுத்தம்

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாரச்சி, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை பணியிலிருந்து இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புரைக்கு அமைய புதன்கிழமை (15) நடைமுறைக்கு வரும் வகையில்...

வேட்பாளர்கள் வாக்கு கேட்க வீட்டுக்கு வந்தால் வீடியோ செய்து அனுப்புங்கள்!

சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளை வீடியோ செய்து மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யும் புதிய முறையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல், வாக்கு பெறுவதற்காக அன்பளிப்புகள் வழங்குதல், ஊர்வலம் நடத்துதல் அடங்கலான சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ செய்து அறிவிக்குமாறு பொதுமக்களை கோருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் திருகோணமலையில் ஆரம்பம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரச்சாரக்கூட்டம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வருகின்ற 18.7.2015 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கலை அம்பாறையில் ஆரம்பித்து வன்னியில் முடித்தது. தற்போது பிரச்சாரக்கூட்டத்தினை தமிழர்களின் கோட்டை எனப்படும் கோணமலையில் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் திருகோணமலையில் முன்னணியின் தலைமைச்செயலகமும் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. மக்களை திரண்டுவந்து தமிழ்தேசிய அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான...

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக மத பெரியார்களிடம் ஆசிர்வாதம் பெற்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சைக்கிள் சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடமும், நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களிடமும், சமூக சேவையாளரும் இந்து மத பெரியாருமான ஆறுதிருமுருகன் அவர்களிடமும் ஆசீர்வாதத்தினை...

வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? – சிவாஜிலிங்கம்

மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு...

குறுக்கு விசாரணைக்கு என்னால் பதிலளிக்க முடியாது; நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கில் சாட்சியமளித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலாளர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கு விசாரணையில் ஒரு வினாவிற்குக் கூட என்னால் பதிலளிக்க முடியாது என நீதிமன்றிற்கு நேரடியாக தெரிவித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. கடந்த 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான...

யாழ். நீதிமன்றத் தாக்குதல்: 30 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில், ஒருவர் பிணையில்

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர்...

இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல்!

இலங்கைத் தமிழரசுக்கட்சி தேசியப்பட்டியல் விபரம்.. 01. திரு.சி.க.சிற்றம்பலம் 02. திரு.சொலமன் சிறில் 03. திரு.மயில்வாகனம் தேவராஜ் 04. திரு.சூ.செ.குலநாயகம் 05. திரு.வி.கனகநமநாதன் 06. திரு.அ.குணபாலசிங்கம் 07. திருமதி.நாச்சியார் செல்வநாயகம் 08. திரு.அந்தோனிப்பிள்ளை மேரியம்மா 09. திருமதி.மேரிகமலா குணசீலன்

மஹிந்தவுக்கு தலைவர் பதவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் விஷேட சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் ஆரம்பமானது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கம் எனக்குத் தெரியப்படுத்திய இரகசிய விடயங்களை வெளியிடுவேன்! – வித்தியாதரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த...

போதைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க செயற்பாடுகள் முன்னெடுப்பு

யாழ். மாவட்டத்தில் போதைக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார். வடக்கில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான...
Loading posts...

All posts loaded

No more posts