- Friday
- September 25th, 2026
கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 'கோப்பாய் கோமகன்' என்று அழைக்கபடும் கு.வன்னியசிங்கத்தின் சமாதியானது இராணுவத்தினரால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. கோமகனின் சாம்பலை வைத்து அமைக்கப்பட்ட இந்தக் கோவிலின் மேல் பகுதியில் சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, கவுணாவத்தை பூசகர் ஒருவர் பூசை வழிபாடுகளாற்றி வந்திருந்தார். இந்தச் சமாதியை கோமகனின் மனைவி கமலா அமைத்து...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, 'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது' மற்றும் 'இலங்கையில்...
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க விரும்பும் அதிபர்கள் தங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அதற்கான முன் அனுமதி பெற்று அதனைச் செயற்படுத்த முடியுமென வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணிக்கு நல்லூர் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு, பல்கலைக்கழக நிர்வாக தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கனிஷ்ட மாணவர்கள் இடுப்புப் பட்டி அணிந்து வருவதற்கும் மரங்களின் கீழுள்ள பென்ச்களில் அமர்வதற்கும் சிரேஷ்ட மாணவர்கள் அனுமதியளிக்க மறுத்தனர். அதனையும் மீறி கனிஷ்ட மாணவர்கள் நடந்து கொண்டதாகக் கூறப்பட்டு, ஏற்பட்ட முறுகல் நிலை...
தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று புதன்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிமல் லன்ஸாவும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவும் தங்களுடய அமைச்சுப் பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். இதற்கமைவான, உள்நாட்டலுவல்கள்...
வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால்,...
அமைச்சர்கள் வசதிகளை பெற்றுக்கொண்டு வேலைச்செய்வதில்லை என்ற எண்ணமே மக்கள் மனதில் இன்னும் இருக்கின்றது. அந்த எண்ணத்தை ஆறு மாதங்களில் மாற்றுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புடவைக் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த உடைகள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்தியில் இடம்பெற்றுள்ளது. திடீரென புடவைக் கடையில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர். அத்துடன் யாழ். மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு உடனடியாக விரைந்து...
யாழ்.மாவட்டத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 23 பேருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், தெல்லிப்பளை, மருதங்கேணி, பருத்தித்துறை, கரவெட்டி, உடுவில், யாழ்ப்பாணம், சங்கானை ஆகிய 10 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 29 கிராமசேவர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான...
மயக்கமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று காரைநகர் வைத்திசாலையில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வேளையில் பந்தைப் பிடிக்க ஒடிச்சென்ற வேளையில் இருவர் மோதிக்கொண்டதில்...
வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் பொருட்டு, ´சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும்´ எனும் தொனிப்பொருளில் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அப்பயிற்சிநெறிக்கான பாடசாலை நேற்று புதன்கிழமை யாழ் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலை யாழ். நகர் 3ஆம் குறுக்கு வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனும், கனேடிய பல்கலைக்கழக வதிவிட பிரதிநிதி எஸ்தர் மக்டோன்ஸ்...
யாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சார நிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி என்பவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான வின்சென்ற் கெனடி கழக மத்தியகுழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பருத்துத்துறை நகரபிதாவுமாவார். திருமலையில் கடந்த திங்கட்கிழமை (07.09.2015) இடம்பெற்ற...
எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2020ம் ஆண்டுவரை அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் எதிர்பார்க்க கூடாது என்றும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட...
இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி...
தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு, இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் ரி.பி.ஏக்கநாயக்க - காணி பிரியங்கர ஜயரட்ன - சட்டம் ஒழுங்கு லக்ஷமன் யாப்பா -...
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சந்தேக நபர்கள் 24 பேர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கட்டங்கட்டமாக பிணையில் விடப்பட்டுள்ளார்கள். இவர்கள் 24 பேரும் கைதுசெய்யப்பட்டு...
யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் நூற்றாண்டு விழாப் பேரணி இடம்பெற்றது. இன்று 09.09.2015 புதன்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி 9.30 மணியளவில் நிறைவடைந்தது. 1915 – 2015 நூற்றாண்டு விழாவை பொதுமக்களுக்கு அறியத் தரும் முகமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தி முன்னே செல்ல மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்...
யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த கொழும்பை சேர்ந்த இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். இக்கைது சம்பவம் நேற்று முன்தினம் மாலை யாழ். நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு அருகாமையிலேயே இடம்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த தனியார் கல்வி நிலையத்தில் மாலை நேர...
சமூகச் சீரழிவுகளை மக்களால் இனங்கண்டு கொள்ள முடியும். அவ்வாறு இனங்கண்டு கொள்ளக் கூடியவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அறிவியுங்கள் என காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அதிகாரி ஜபார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வீதியோரங்களில் நின்று பாடசாலை செல்லும் மாணவிகள் மற் றும் யுவதிகளுடன் பகிடவதையில் ஈடுபட்டுவரும் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். மோட்டார் சைக்கிளை...
Loading posts...
All posts loaded
No more posts



