ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு வலிகாமம் உயர்பாதுகாப்பு வலய பகுதிகளுக்கு விஜயம்

ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மதியம் 12.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

un-vist-north-tellippalai

வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளுக்கு ஜரோப்பிய குழு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டப் பணிகள் தொடர்பாகவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகனிடம் கலந்துரையாடிச் சென்றனர்.

Related Posts