- Friday
- September 25th, 2026
எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும்...
தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடிய வகையில்- சுயநிர்ணயம் மற்றும் சமஷ்டியை உள்ளடக்கியதாக அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் இப்பொழுது இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிக் கதைக்கிறது. அந்த சீர்திருத்தத்தில் எமது...
யாழ்.மாவட்டத்தில் தற்போது மணல் அகழ்வதற்கு தடை விதிக்கப்பட்டமையால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், முக்கிய செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக மணல் தேவைப்படும் போது, அந்தந்த பிரதேச செயலாளர் ஊடாக தொடர்புகொண்டு மணலை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று...
தெல்லிப்பழை பிரதேசத்தில் முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பன இடம்பெற்றன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரையில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோது இவர் இவ்வாறு...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில்...
சமூர்த்தி நிவாரணம் பெற்ற பயனாளிகளில் 80 பயனாளிகளுக்கான வீட்டு கடன் உதவி இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது. சமூர்த்தி பயனாளிகளுக்கான காசோலைகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வழங்கி வைத்தார். 2014...
இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. மனித உரிமை மீறல்களுக்கு உள்ளக பொறிமுறை பொருத்தமற்றது என்பதை சட்டிக்காட்டியும் சர்வதேச விசாரணையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம்...
யாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார அதிகாரி தனசேகரன் வசந்த சேகரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு குழு...
இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில்...
யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களினால் 75 தினங்களில் 48 பேர் மரணமடைந்துள்ளதுடன் 4ஆயிரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளி விபரங்களின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கள்...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்தப்பணியினை உரிய வகையில் நான் மேற்கொள்வதுடன் தேசிய ரீதியிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும், பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறை ஆகியவற்றின் தாபகத் தலைவருமாகிய வாழ்நாள் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் நேற்று (09-09-2015) காலை கொழும்பில் காலமானார். கொழும்பு பல்கலைக் கழக பௌதிகவியற்றுறைப் பட்டதாரியாகிய பேராசிரியர் குணரட்ணம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது கலாநிதி பட்டம் உட்பட பல...
முல்லை மாவட்ட விவசாயிகள் 128 பேருக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து விதைநெல் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சிக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை (09.09.2015) இடம்பெற்ற நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு விதைநெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவைத்துள்ளார். உவர்எதிர்ப்பு நெல்லினமான ஏ.ரீ 362 மற்றும் நீரிழிவு...
வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது....
நேற்று நடைபெற்ற அமைச்சு பொறுப்பேற்கும் நிகழ்வில் வடக்கு மக்களுக்கு நன்றிக்கடனாக விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுபதவி வழங்கப்பட்டது. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை தமிழ் பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர். சர்வதேச அரசுகளுடன் சேர்ந்து...
முன்னதாக கடந்த வாரத்தில், ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் sarath fonseka-2015நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலரும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கருணா அம்மான் என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன், இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இப்போது கூறப்படுவது போல பிரபாகரன் ஸ்ரீலங்கா இராணுவத்தினாரால் கொல்லப்படவில்லை, ஆனால்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பது, என்ற பேச்சுக்கே இடமில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டால் மாத்திரமே கூட்டமைப்பால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ்வாறான எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். 'வடமாகாண...
Loading posts...
All posts loaded
No more posts



