Ad Widget

ஆசிரியர் என்னை அடித்தார் ஆனால் என் பெற்றோர் பொலிஸில் முறையிடவில்லை- ஜனாதிபதி

பாடசாலையில் தான் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை அதிபர் ஒரு முறை தன்னை பிரம்பு உடையும் வரையும் அடித்ததாகவும் அதற்கான காரணம் என்னவென்று தான் இன்னும் அறியவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு அசேகா கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் இலவச கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும். இலவச கல்வி முறையை மேலும் வலுப்படுத்தி, நாட்டின் பிள்ளைகளை புதிய தொழிற்நுட்பத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறந்தது மாணவர்களுக்கு கிடைப்பது போல வர்த்தக சமூகத்தில் கெட்டவைகளையும் பெற்றுக்கொள்ள பிள்ளைகள் முயற்சிக்கின்றனர். கெட்டவைகளை பிள்ளைகள் தவிர்த்து கொள்ள வேண்டும்.

நான் படித்த தோப்பாவௌ பாடசாலையின் ஆசிரியர்கள் என்னை எந்தளவுக்கு என்னை பிரம்புகளால் அடித்துள்ளனர் என்பது எனக்கு நினைவில் உள்ளது. அடிக்கும் போது வகுப்பில் பிள்ளைகள் சத்தமிடுவார்கள்.

அதனை பார்த்து கொண்டிருந்த பாடசாலை அதிபர் என்னை அடித்திருக்கலாம். ஆனால் வீட்டுக்கு சென்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கூறினால், அதனை விட அதிகமாக அடி வாங்க வேண்டும் வரும் என்று நான் அறிந்திருந்தேன்.

என்மீது எந்த தவறும் இல்லையொன்றாலும் ஆசிரியர் அடித்தார் என்பதற்காக எனது பெற்றோர் காவற்துறை நிலையத்திற்கு செல்லமாட்டார்கள். வேறு சட்டத்தையும் நாடமாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts