Ad Widget

உள்ளக விசாரணை நம்பகமற்றது : ஜனாதிபதி ஆணைக்குழுவாலும் எதுவித விமோசனமில்லை – தர்ஷன்

உள்ளக விசாரணையென்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததும் நம்பகத்தன்மையற்ற விசாரணையாகவே அமையுமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நாகேந்திரன் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்கப்படவேண்டும் என்பதிலும் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக இருப்பதாகவும்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக மக்கள் சாட்சியமளித்தும் இதுவரையில் எதுவித விமோசனமும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் மீண்டும் உள்ளக விசாரணையை அரசு வலியுறுத்தி வருவதனை ஏற்றுக்கொள்ள முடியாதபோதும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

காணாமல்போனவர்களின் குடும்பங்கள் இன்று பொருளாதார ரீதியில் பின்னடைவுகளையும் விதவைகளாக்கப்பட்டோரின் வாழ்வாதாரம் வறுமை நிலைக்கும் இட்டுச்செல்வதாகவும் கவலை தெரிவித்தார்.

பிந்திய நீதியென்பது மறுக்கப்பட்ட நீதியாக மாற்றமடையாது துரிதகதியில் விசாரணைகள் நடாத்தப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது தொடர்ந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை மற்றும் மறுக்கப்படும் நீீதி தொடர்பிலும் குரல்கொடுக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts